ஹுவா சோங் கல்விக் கழகத் தின் ஆசிரியர் ஒருவர் போதைப் பொருள் குற்றச்சாட்டு தொடர் பாக நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். பிரிட்டனைச் சேர்ந்த 65 வயது டேவிட் பர்க் மீது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் தேதியன்று குற்றச்சாட்டு பதிவானது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 14ஆம் தேதியிலிருந்து 19ஆம் தேதி வரை ஐந்து போதைப்பொருள் பொட்டலங் களை வைத்திருக்க அவர் முயன்றதாகக் கூறப்படுகிறது. அந்தப் பொட்டலங்களில் குறைந்தது 3.6 கிலோ எடை கொண்ட போதைப்பொருள் இருந்ததாகக் கண்டுபிடிக்கப் பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 20ஆம் தேதியன்று பர்க் போதைப் பொருள் உட்கொண்ட தாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி இரவு 11.20 மணி அளவில் எங் நியோ அவென் யூவுக்கு அருகில் உள்ள லின்டன் டிரைவில் போதைப் பொருள் உட்கொள்வதற்காகப் பயன்படுத்தப்படும் கருவியுடன் அவர் காணப்பட்டதாக தெரி விக்கப்பட்டது. பர்க்கின் மருத்துவ அறிக் கையைத் தயார் செய்ய நான்கு வாரங்கள் எடுக்கும் என்று நேற்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. $10,000 பிணையில் பர்க் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் அடுத்த மாதம் 1ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னி லையாக வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.

