தங்கள் வீடுகளை வாங்க, விற்க விரும்புவோர் இனி சொத்து முகவர்களின் பணி தொடர்பான விவரங்களை இணையத்திலேயே தெரிந்துகொள்ளலாம். சொத்து முகவை மன்றத்தால் நேற்று தொடங்கி வைக்கப்பட்ட சொத்து முகவர் பரிவர்த்தனை தகவல் திட்டத்தின் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில் சம்பந்தப்பட்ட சொத்து முகவர் மேற்கொண்ட குடியிருப்புப் பரி வர்த்தனைகளை வீடுகளை வாங்க, விற்க விரும்புவோர் அறிந்துகொள்ளலாம். தற்போது மன்றத்தின் இணை யத் தளத்தில் வெற்றிகரமாக முடிக்கப்பட்ட வீடமைப்பு வளர்ச் சிக் கழக வீட்டு பரிவர்த்தனை விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. எப்போது வீடு கை மாறியது, வீடு எங்குள்ளது, சம்பந்தப்பட்ட முகவர் வீடு வாங்குவதில் செயல் பட்டாரா விற்பதில் செயல்பட்டாரா போன்ற விவரங்களும் அதில் அடங்கும்.
"இந்தக் கூடுதல் தகவல் களால் வாடிக்கையாளர்களுக்கு தாங்கள் பயன்படுத்த விரும்பும் முகவரின் அனுபவம், திறமை பற்றிய விவரங்கள் கிடைக்கும்," என்று சொத்து முகவை மன்றம் விவரித்தது. இணையத்தளத்தில் உள்ள தகவல்கள் கடந்த 24 மாதங்கள் பற்றியதாகத்தான் இருக்கும். அதன் மூலம் வாடிக்கையாளர்க ளுக்கு சொத்து முகவர்கள் பற் றிய ஆகக் கடைசித் தகவல்கள் கிடைக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்த தகவல் வேண்டு மாயின் அவர்கள் data.gov.sg எனும் இணையத் தளத்தில் பெற்றுக்கொள்ளலாம். ஜனவரி 1ஆம் தேதி வரை உள்ள தகவலின்படி, சிங்கப்பூரில் இப்போது 29,146 சொத்து முக வர்கள் உள்ளனர். இது 12 மாதங்களுக்கு முன்பிருந்த 28,571 எண்ணிக்கையைவிட 2 விழுக்காடு அதிகம். தற்போது 1,229 சொத்து முக வைகள் உள்ளன. இது முன்பி ருந்த 1,269 முகவைகளைவிட 3.2 விழுக்காடு குறைவு.

