எஸ்.வெங்கடேஷ்வரன்
இவ்வாண்டு தைப்பொங்கல் 15ஆம் தேதியன்று கொண்டாடப் படும். 11ஆம் முறையாக லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடை மைச் சங்கம் (லிஷா) பொங்கலுக் கான பல நிகழ்ச்சிகளை, சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் மற்றும் அதன் சமூகப் பங்காளிகளோடு இணைந்து, ஒரு மாதத்திற்கு நடத்த திட்டமிட்டுள்ளது. "சிங்கப்பூரில் அறுவடைக்கு இடமில்லை, ஆனால் நம்மை பொறுத்த வரையில் பொங்கல் என்பது நம் நன்றியை விவசாயி களுக்குத் தெரிவிக்கும் ஒரு பண் டிகை. நாம் அடைந்துள்ள முன் னேற்றங்களுக்கு நன்றி கூறும் வகையில் இந்தப் பண்டிகையை நாம் கொண்டாடுகிறோம்," என் றார் லிஷாவின் தலைவர் திரு ராஜ்குமார் சந்திரா.
நடக்கவிருக்கும் நிகழ்ச்சி களில் குறிப்பிடத்தக்கது ஒவ்வோர் ஆண்டும் மக்களின் கண்களைக் கவரும் ஒளியூட்டு. இவ்வாண்டு விவசாயத்தையும் விவசாயிகளையும் மையமாக கொண்ட ஒளியூட்டு அலங்காரங் கள் 32 தோரணங்களாகக் காட்சி யளிக்கின்றன. இந்த ஒளியூட்டு இம்மாதம் 11ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை மொத்தம் 31 நாட்களுக்கு நீடிக்கும்.
இம்மாதம் 11ஆம் தேதியன்று கேம்பல் லேன் பகுதியில் மாலை 6.30 முதல் 10 மணி வரை ஒளி யூட்டு விழா நடைபெறும். சிறப்பு விருந்தினராக கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ கலந்துகொண்டு ஒளியூட் டைத் தொடங்கி வைப்பார். அதோடு முதல்முறையாக பொதுமக்கள் ஒரு காளை மாடு, மூன்று பசுக்கள், 2 கன்றுகள், 2 ஆடுகள் ஆகியவற்றை உள்ளடக் கிய பண்ணை விலங்குகளின் வருகையைக் காணலாம். லிட்டில் இந்தியாவின் கேம்பல் லேன் பகுதிக்கு 10ஆம் தேதி மாலை 4 மணிக்கு வரவிருக்கும் இந்த விலங்குகள் லிட்டில் இந்தி யாவின் குறிப்பிட்ட பகுதிகளை அந்நாள் சுற்றி வரும். அதன் பின் 'ஹேஸ்டிங்ஸ்' சாலையில் அமைந்துள்ள மாதிரி பண்ணையில் இம்மாதம் 19ஆம் தேதி வரை இவ்விலங்குகள் வைக் கப்பட்டிருக்கும். பொதுமக்கள் இந்த விலங்குகளைப் படம் எடுக்க வாய்ப்புகளும் இருக்கும்.
இதற்கிடையில் மாட்டுப் பொங் கலைக் கொண்டாட, இம்மாதம் 16ஆம் தேதியன்று மாலை 4 மணிக்கு இந்தப் பண்ணையில் இருக்கும் விலங்குகள் பூ மாலை கள், வண்ண ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு வழி பாடுகள் நடத்தப்படும். அதையடுத்து லிஷாவின் முயற்சிகளுக்கு முக்கிய பங்கா ளித்துவ அமைப்பான இந்திய மரபுடமை நிலையத்தில், இம்மாதம் 19, 20 ஆகிய தேதிகளில் பொங் கல் பொது வரவேற்பு நிகழ்ச்சி இடம்பெறும். சிங்கப்பூரர்களுக்கு மட்டுமில் லாமல் பல வெளிநாட்டவர்களுக் கும் இந்திய கலாசாரத்தைப் பற்றி அறிய இது நல்ல வாய்ப்பாகும் என்றும் இது லிஷாவின் நோக்க மாகும் என்றும் கூறினார் திரு ராஜ்குமார்.
இந்திய மரபுடமை நிலையத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை மேலும் தெரிந்துகொள்ள 'ஐ.எச்.சி. பொங் கல் ஓப்பன் ஹவுஸ்' என்றழைக் கப்படும் ஃபேஸ்புக் பக்கத்தை நாடலாம். அத்துடன் சூரியப் பொங்கலை ஒட்டி தைப்பொங்கல் தினத்தன்று, ஸ்ரீ நாராயண மிஷன் இல்லத்தைச் சேர்ந்த 50 முன்னோடித் தலை முறையினருக்காக கேம்பல் லேனில் மாலை 5 மணிக்கு நிகழ்ச்சி ஒன்றும் நடத்தப்படும். அந்நிகழ்வில் சமூகத் தலை வர்கள் ஒரு பெரிய மண்பானையில் பொங்கல் தயாரிப்பார்கள். அந் நாளிலும் அதற்கு அடுத்த நாளும் பொங்கல் சாதம் இலவசமாக லிட்டில் இந்தியாவில் வழங்கப் படும். "நாம் செய்யும் பல்வேறு முயற்சி களில் முக்கியமாக கவனிக்க வேண்டியது இளம் தலைமுறை யினரின் ஈடுபாடு. இவ்வாண்டு பொங்கலுக்கு சுமார் 2,000 மாண வர்களின் பங்கேற்பை எதிர்பார்க் கிறோம்," என்று மேலும் கூறினார் திரு ராஜ்குமார்.

