மிண்டானாவ் தாக்குதலுக்கு சிங்கப்பூரர் உட்பட நால்வரின் மரணங்கள் காரணமாக இருக்கலாம்

மிண்டானாவ் தாக்குதலுக்கு சிங்கப்பூரர் உட்பட நால்வரின் மரணங்கள் காரணமாக இருக்கலாம்

2 mins read

இஸ்லாமிய போராளியாக மாறிய சிங்கப்பூரர் கடந்த மாதம் பிலிப்பீன் சில் கொல்லப்பட்டார். அவரது மர ணம் அடுத்த சில நாட்களில் பிலிப்பீன்சின் மிண்டானாவ் தீவில் நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலுக் குக் காரணமாக இருந்திருக்கலாம் என்று அந்நாட்டின் உளவுத்துறை அதிகாரிகள் கருதுகின்றனர். அந்த சிங்கப்பூரரின் பெயர் அபு ஹுட் ஸைன் என்று மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் அடையா ளம் காட்டினார். ஆனால், அது அவரது இயற்பெயரா அல்லது புனைபெயரா என்று உறுதியாகத் தெரியவில்லை.

அபுவின் அடையாளத்தை உறுதி செய்வதற்குத் தேவைப்படும் அவரது பாஸ்போர்ட் அல்லது இதர ஆவணங்களை அதிகாரிகள் தொடர்ந்து தேடி வருகின்றனர் என்று கூறினார் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி. மகுயின்டானாவ் மாநிலத்தில் உள்ள மமசபானோ நகரில் டிசம்பர் 22ஆம் தேதி பாதுகாப்புப் படைகள் நடத்திய ரகசிய தாக்குதலில் அபு கொல்லப்பட்டார். அவருடன் இந்தோனீசியரான அப்துல்ரஹித் ருஹ்மிசந்தி, பிலிப் பீன்சைச் சேர்ந்த சகோதரர்களான சாலாமுதின், முகம்மது ஹசான் ஆகியோரும் கொல்லப்பட்டனர். இந்த மரணங்கள் நிகழ்ந்த ஒரு வாரத்துக்குப் பிறகு டிசம்பர் 31ஆம் தேதி தென் பிலிப்பீன்சில் உள்ள கொட்டாபட்டோ நகர் கடைத்தொகுதிக்கு வெளியே ஒரு குண்டு வெடித்தது. அதில் இருவர் மாண்டனர். பலர் காயம டைந்தனர்.

இந்த நான்கு போராளிகளின் மரணத்துக்குப் பழி வாங்கும் நட வடிக்கையாக வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று மேஜர் ஜெனரல் சிரிலிட்டோ சோபேஜானா செய்தியாளர்களிடம் கூறினார். மகுயின்டானாவ் டவ்லா இஸ் லாமியா என்று அழைக்கப்படும் முஹாஜிரீன் வால்-அன்சார் தீவிரவாத அமைப்பின் உறுப்பினர் களில் ஒருவர் அபு என்று கூறப் படுகிறது. அந்த அமைப்பின் தலைவர் அபு டுரைஃபி என்று அழைக்கப்படும் இஸ்மாயில் அப்துல் மாலிக். டுரைஃபி குழுவில் உள்ள சுமார் 150 போராளிகள் வட கொட்டாபட்டோ மாநிலத்திலிருந்து மகுயின்டானாவுக்கு சென்றுள்ள னர் என்று உளவுத்துறை தகவல் கூறின.

இந்தப் பிரிவு தென்கிழக்கா சியா, மத்தியக் கிழக்கு, வட ஆப் பிரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த 'ஐஎஸ்ஐஎஸ்' தீவிரவாதிக ளுக்கு அடைக்கலம் கொடுத்து வருகிறது. "இந்தத் தாக்குதல் ஒருவகை யில் அரசியல் சார்புடையதாக இருக்கலாம் என்பதற்கான வலு வான அறிகுறி தென்படுகிறது. ஆனால், இந்தத் தாக்குதல் தற் போது ஆட்சியில் இருக்கும் சயாடி குடும்பத்துக்கு ஓர் எச்சரிக்கையாக வும் இருக்கலாம்" என்று கூறினார் ஜகார்த்தாவைத் தளமாகக் கொண்ட மோதல் தொடர்பான கொள்கை ஆய்வுக் கழகத்தின் இயக்குநர் சிட்னி ஜோன்ஸ்.