அரசாங்க வேலை தேடல் தளத்தில் அதிக வேலைகள்

அரசாங்க வேலை தேடல் தளத்தில் அதிக வேலைகள்

2 mins read

மேம்பட்ட வேலை இணைப்பு, அதிகமான வேலை வாய்ப்புகள் போன்றவை இடம்பெறும் 'மைகெ ரியர்ஸ் ஃபியூச்சர்.எஸ்ஜி' (MyCareers Future.sg) எனும் அரசாங்கத்தின் வேலை தேடல் தளம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப் பட்டதிலிருந்து பல மேம்பாடு களுடன் செயல்பட்டு வருகிறது. ஊழியரணி சிங்கப்பூர் அமைப்பும் அரசாங்க தொழில் நுட்ப அமைப்பும் இணைந்து அமைத்திருக்கும் இந்த இணை யத் தளத்தை இதுவரை 500,000க்கு மேற்பட்டோர் நாடி உள்ளனர். 'ஜோப்கிரேட்' எனும் தொழில் நுட்ப நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒத்துழைப்பால் வேலை களுடன் வேலை தேடுவோரை இணைத்தல், 'ஜோப்டெக்' நிறுவ னத்துடன் செய்துகொண்ட ஒத் துழைப்பால் மேம்பட்ட ஆற்றல் களைப் பெற்றுள்ளவர்களை வங்கி, நிதி, தகவல் தொழில்நுட் பம் போன்ற துறைகளில் வேலை களோடு இணைத்தல் போன்ற அம்சங்களை மேம்படுத்தப்பட்ட இணைய வாசலில் காணலாம்.

முதலாளிகளுக்கான புதிய தளத்தை அமைக்கும்படி நெதர் லாந்தைச் சேர்ந்த டயுள்யூ.சி.சி. நிறுவனத்தை ஊழியரணி சிங்கப்பூர் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. இது இவ் வாண்டு முற்பாதியில் தொடங் கும். உலகளாவிய வேலை வாய்ப்பு தளமான 'இன்டீட்' அமைப்புடன் ஊழியரணி சிங்கப்பூர் அமைப்பு உடன்பாடு செய்துகொண்டிருப்ப தால் அதன் மூலமும் முன்பிருந்த மாதத்துக்கு 23,000 வேலை வாய்ப்பு எண்ணிக்கையிலிருந்து இப்போது மாதத்துக்கு 35,000க்கு மேற்பட்ட வேலை வாய்ப்புகள் 'மைகெரியர்ஸ் ஃபியூச்சர்.எஸ்ஜி' இணைய வாசலில் கிடைக்கின்றன. தமது அமைப்பு, மேலும் பல பங்காளித்துவ அமைப்புகளுடன் அணுக்கமாகப் பணியாற்றி, புதிய ஒத்துழைப்புகள் பற்றி ஆராய்ந்து 'மைகெரியர்ஸ் ஃபியூச்சர்.எஸ்ஜி' இணைய வாசலைத் தொடர்ந்து மேம் படுத்தும் என்று ஊழியரணி சிங்கப்பூரின் தலைமை நிர்வாகி டான் சூன் ‌ஷியான் தெரிவித்தார்.