தனக்கு முன்னால் சென்ற லாரி மிகவும் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்ததே, மோட்டார் சைக்கிளோட்டி கோபமடைந்து லாரி ஓட்டுநரைத் தாக்க முயன்ற சம்பவத்துக்கு இட்டுச் சென்றது என்று தெரிய வந்துள்ளது. லாரி ஓட்டுநரின் முதலாளி யிடம் பேசிய தி நியூ பேப்பர் நாளிதழ் வெளியிட்ட செய்தியில், கடந்த திங்கட்கிழமை ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டில் லாரியின் பின்னால் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளோட்டி ஹாரன் அடித்துக்கொண்டே வந்தார் என்றும் பின்னர் லாரியை முந்திக்கொண்டு வந்த மோட்டார் சைக்கிளோட்டி, லாரி ஓட்டுநரைத் திட்டினார் என்றும் அந்த முத லாளி கூறினார். ஓட்டுநரைக் கீழே இறங்கச் சொல்லியும் அவர் இறங்காததால், கோபமடைந்த மோட்டார் சைக்கி ளோட்டி லாரியின் முன் கண்ணா டியை உதைத்தார். அங்கிருந்து புறப்பட முனைந்த லாரி அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீதும் மோதியதுடன் மோட்டார் சைக்கிளோட்டி மீதும் மோதவிருந்தார்.
மெதுவாக சென்ற லாரியால் கோபம் அடைந்தார்
1 mins read

