வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனின் அழைப்பை ஏற்று இரண்டு நாள் வருகை மேற் கொண்டு இம்மாதம் 4ஆம், 5ஆம் தேதிகளில் சிங்கப்பூரில் இருப்பார் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் ஜெரமி ஹண்ட். திரு ஹண்ட் நேற்று பிரதமர் லீ சியன் லூங்கைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். அவர்கள் இரு நாடுகளுக்கிடையிலான வலு வான, வளரும், விரிவான உறவை மறுவுறுதிப்படுத்திக்கொண்டனர். டாக்டர் விவியனையும் சந் தித்துப் பேசிய திரு ஹண்ட், அனைத்து நிலைகளிலும் இரு நாடுகளின் உறவை வலுப்படுத்திக் கொள்வதுடன், தடையற்ற வர்த் தகம், அனைத்துலகச் சட்டம், விதி சார்ந்த பலதரப்பு முறை ஆகியவற்றில் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் கூட்டுக் கடப் பாட்டை மறுவுறுதிப்படுத்திக் கொண்டனர். வட்டார, அனைத்துலக ரீதியி லான விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் பல தகவல் களைப் பரிமாறிக்கொண்டனர்.
பின்னர் அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் ஜெரமி ஹண்டும் 'எதிர்காலத்துக்கான சிங்கப்பூர்-பிரிட்டன் பங்காளித் துவம்" குறித்த கூட்டு அறிக் கையை வெளியிட்டு அதைத் தொடங்கி வைத்தனர். தற்போதைய இணைப்புகளைப் பிரதிபலிக்கும் இந்தப் பங்காளித் துவம் ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகளையும் உருவாக்கும். இந்தப் பங்காளித்துவத்தைப் பயன்படுத்தி வரும் ஆண்டுகளில் இரு நாடுகளுக்கு இடையிலான உறவை விரிவுபடுத்தவும் ஆழப் படுத்தவும் சிங்கப்பூரும் பிரிட்ட னும் இணக்கம் கண்டுள்ளன. டாக்டர் விவியன், பிரிட்டஷ் தம்பதிகளுக்கு விருந்தளித்தார்.

