மூழ்கும் பையனைக் காப்பாற்றிய உடன்பிறப்புகளுக்கு விருது

மூழ்கும் பையனைக் காப்பாற்றிய உடன்பிறப்புகளுக்கு விருது

2 mins read
46fa92fd-0c1f-4a61-90ce-08b2a42499d3
-

உடன்பிறப்புகளான 20 வயது குமாரி மிக்கேலா கொர்டோவாவும் அவரது 13 வயது தம்பி ஜோ‌ஷு வாவும் கொண்டோமினிய நீச்சல் குளத்தில் குதித்து அதில் மூழ்கிக்கொண்டிருந்த பதின்ம வயது இளையரைக் காப்பாற்றினர். நீரிலிருந்து அவரை வெளியே கொண்டு வந்து பார்க்கையில் அவருக்கு நாடித்துடிப்பு இல்லா தது தெரியவந்தது. பின்னர் குமாரி மிக்கேலா அவர் இயல்பாக மூச்சுவிடும் வரை இதய இயக்க சிகிச்சை அளித்தார். கடந்த மாதம் டிசம்பர் 25ஆம் தேதி மேரிமவுண்ட் கொண்டோ மினியத்தில் அவர்கள் ஆற்றிய தீரச் செயலுக்கு உடன்பிறப்புகள் இருவருக்கு நேற்று குவின்ஸ்வே யில் உள்ள முதலாவது சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தலை மையகத்தில் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

கிறிஸ்மஸ் தினத்தன்று தங் கள் குடும்பம் வெளியே செல்வ தற்குத் திட்டமிட்டது என்றும் இருப்பினும் வீட்டிலேயே கிறிஸ் மசைக் கழிக்க முடிவு செய்ததாக வும் பிள்ளைகளின் தந்தை திரு ஜுன் கொர்டோவா கூறினார். தங்கள் 10வது மாடி வீட்டில் இருந்தபோது மாலை 6 மணியள வில் உதவிக்குரல் கேட்டது என் றும் உடனே 995 எண்ணை அழைத்துவிட்டு, தனது பிள்ளை கள் கீழே ஓடினர் என்றும் அங்கு குமாரி மிக்கேலா உடனே நீச்சல் குளத்தில் குதித்தார் என்றும் திரு ஜுன் தெரிவித்தார். நீச்சல் குளத்தில் அந்த 1.7 மீட்டர் இளையர் தலைகுப்புற, 2.4 மீட்டர் ஆழமான குளத்தில் அடியில் கிடந்தார் என்றும் கூறிய திரு ஜுன், மேலே கொண்டு வரப்பட்ட அந்த இளை யரைத் தான் ஒருவராக இழுக்க முடியாத காரணத்தால் தனது மகனும் குளத்தில் குதித்து உதவினார் என்றும் விவரித்தார்.

நீச்சல் குளத்திலிருந்து வெளியே கொண்டு வந்ததும் மருத்துவ வாகனம் வரும்வரை குமாரி மிக்கேலா அந்த 16 வயது இளையருக்கு முதலுதவி சிகிச்சை செய்தார். பின்னர் அந்த இளையர் டான் டோக் செங் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப் பட்டார். இது குறித்து கருத்துரைத்த முதலாவது சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைப் பிரிவின் தலை வர் கர்னல் லிம் பூன் ஹுவி, "16 வயது பையனை நீச்சல் குளத்தி லிருந்து வெளியே கொண்டு வந்த முயற்சி பாராட்டத்தக்கது. அந்தத் தருணத்திலும் பிள்ளைக ளிடம் அமைதியும் மனதிடமும் இருந்தன," என்று பாராட்டினார்.