'சட்டத்தை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'

'சட்டத்தை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'

2 mins read
338e6099-84ba-4019-ad08-b13d404c0c7f
-

செல்லப்பிராணிகளைத் தற்காலிக மாகத் தங்க வைக்கும் 'பிளாட்டி னம் டோக்ஸ் கிளப்'புக்கு எதி ராகக் கடுமையான குற்றச்சாட்டு கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதன் தொடர்பில் வேளாண்-உணவு, கால்நடை மருத்துவ ஆணையமும் (ஏவிஏ) போலிசும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றன என்று சட்ட, உள் துறை அமைச்சர் கா. சண்முகம் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத் துரைத்திருக்கிறார். "இந்த விவகாரம் தொடர்பில் முழுமையான விசாரணை நடந்து வருகிறது என்பதை சிங்கப்பூரர் களுக்குத் தெரிவிக்க விரும்பு கிறேன். சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுவோர் யாராகி னும் அவர்களுக்கு எதிராக நடவ டிக்கை எடுக்கப்படும்," என்று அமைச்சர் கூறினார். 'பிளாட்டினம் டோக்ஸ் கிளப்' என்ற இடத்தில் விலங்குகளைத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் பற்றி மேலும் குறிப்பிட்ட திரு சண்முகம், தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பிலிருந்து சிலர் தவறிவிட்டதாகவும் சட் டத்தை அவர்கள் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு செயல்பட்ட தாகவும் பல குற்றச்சாட்டுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்றார். புக்கிட் பாஞ்சாங்கில் உள்ள இந்த விலங்குக் காப்பகத்தில் விடப்பட்ட தங்கள் செல்லப்பிராணி கள் கொடுமையாக நடத்தப்பட்டி ருக்கின்றன என்று புகார்கள் கிளம்பியதை அடுத்து கடந்த மாதம் 29ஆம் தேதி, அந்த இடத் தில் சம்பந்தப்பட்ட அமைப்புகள் திடீர் சோதனை நடத்தின.

அந்த இடத்தில் இருந்த 18 நாய்களையும் ஒரு முயலையும் 'ஏவிஏ' அமைப்பு தற்காலிகமாகத் தன்வசம் எடுத்துக்கொண்டுள் ளது. கடந்த புதன்கிழமையன்று, 'பிளாட்டினம் டோக்ஸ் கிளப்'பில் தற்காலிகமாக விடப்பட்டிருந்த நாய்களில் ஒன்றைக் காணவில்லை என்று நாய் உரிமையாளர்கள் சிலர் அந்த இடத்துக்கு வெளியே தங்களுக்கு இது குறித்துத் தக வல் கொடுக்கவேண்டும் என்று குரல் எழுப்பினர். அந்தக் குழுவின் தலைவர் என்று நம்பப்படும் 30 வயதுகளில் உள்ள திருவாட்டி மாவ் என்பவர், தனது ஏழரை வயது 'ஜெட்லாண்ட் ‌ஷீப்' வகை நாயைக் காணவில்லை என்று தானும் தனது நண்பர்களும் தகவல் தேடி அங்கு வந்ததாகக் கூறினர். ஆனால், அந்த விலங்குக் காப்பகத்தின் உரிமையாளர் அது குறித்து தகவல் அளிக்கவில்லை என்று திருவாட்டி மாவ் சொன்னார். சிறிது நேரத்தில் அங்கு வந்த போலிஸ் அதிகாரிகள் அந்த இடத் தின் முன்வாசலிலிருந்து அகலும் படி அங்கிருந்தவர்களைக் கேட் டுக்கொண்டனர்.

அப்போது அந்த இடத்திலி ருந்து ஒரு காரில் ஒரு பெண்ணும் அவரது ஆண் தோழரும் புறப்பட் டனர். அவர்கள் தங்கள் காரைப் பின்னுக்கு ஓட்டி வந்தபோது அங்கிருந்த ஒருவர் மீது மோதி விட்டனர். இந்த விசாரணையில் 33 வயதான காரின் ஓட்டுநரும் எழு பெண்கள் கொண்ட குழுவும் உதவி வருகின்றனர் என்று போலிஸ் தெரிவித்தது. 'பிளாட்டினம் டோக்ஸ் கிளப்' பற்றி தகவல் தெரிவிக்க விரும்பு வோர் 1800-4761600 என்ற எண் ணில் தங்களைத் தொடர்புகொள் ளலாம் என்று வேளாண்-உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் நேற்று தெரிவித்தது.