மதுபோதையில் வாகனமோட்டிய ஐவர் கைது

மதுபோதையில் வாகனமோட்டிய ஐவர் கைது

2 mins read
cb54e130-2273-4d99-8ac2-a8454eecd3c4
-

மதுபோதையில் வாகனமோட்டு வோருக்கு எதிராக போக்குவரத்து போலிசார் நேற்று முன்தினம் தீவு முழுவதும் நடத்திய திடீர் சோத னையில் நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டனர். 21 வயதுக்கும் 49 வயதுக்கும் இடைப்பட்ட அந்த ஐவரும் மது போதை அளவைக் கணக்கிடும் சோதனையில் தோல்வி கண்டதால் அவர்கள் மதுபோதையில் வாகன மோட்டியதற்காகக் கைது செய்யப் பட்டனர். இந்தத் தீடீர் நடவடிக்கையில் மொத்தம் 30 வாகனமோட்டிகள் நிறுத்தப்பட்டு, அவர்களிடம் மது போதை பரிசோதனை செய்யப்பட் டது. 100 மில்லி லிட்டர் மூச்சுக்காற் றில் குறைந்தது 35 மைக்ரோ கிராம் மது இருக்க வேண்டும்.

இதுதான் சட்டப்படி அனுமதிக்கப் பட்ட அளவு. நேற்று முன்தினம் கைதானவர் களில் ஆகக் கூடுதலாக ஒருவ ரின் மூச்சுக்காற்றில் 55 மைக்ரோ கிராம் மது இருந்தது. மதுபோதையில் வாகனமோட் டும் குற்றத்துக்காக முதல் முதலில் கைது செய்யப்படுவோருக்கு $1,000 முதல் $5,000 வரை அப ராதம் விதிக்கப்படுவதுடன் அவர் களின் வாகனமோட்டும் உரிமம் அவர்களின் மூச்சுக்காற்று பரிசோ தனை முடிவுகளின்படி குறைந்தது 12 மாதங்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்படலாம். அத்துடன் உரிம ரத்துக் காலம் முடிந்தவுடன் தண்டனை பெற்ற வர்கள் தங்கள் வாகனமோட்டும் உரிமத்துக்கு மீண்டும் விண்ணப் பித்துத் தேர்ச்சி பெற வேண்டியிருக் கும். மறுமுறை குற்றம் புரிபவர்க ளுக்கு $3,000 வரை அபராதமும் மூன்றாண்டு வரை சிறை ஆகி யவை தண்டனையாக விதிக்கப்பட லாம். கடந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மதுபோதை யில் வாகனமோட்டியதால் 126 விபத்துகள் நிகழ்ந்தன என்றும் அது 2017ஆம் ஆண்டைக் காட்டி லும் 22.3% அதிகம் என்றும் கூறப்பட்டது.