காற்சட்டைப் பைக்குள் நான்கு பூனைக்குட்டிகள்

காற்சட்டைப் பைக்குள் நான்கு பூனைக்குட்டிகள்

1 mins read
f6e5a0a1-eaad-4ed4-9d30-069a37c056f6
-

தனது காரை 45 வயது சிங்கப்பூர் ஆடவர் துவாஸ் சோதனைச் சாவடியில் நிறுத்தியபோது அவரது காரிலிருந்து பூனையின் சத்தம் கேட்டது. பின்னர் நடத்தப்பட்ட கூடுதல் சோதனையின்போது அவரது காற்சட்டைப் பைக்குள் உயிருள்ள பூனைக்குட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தின் விசா ரணையும் பூனைக்குட்டிகளும் வேளாண்-உணவு கால்நடை மருத்துவ ஆணையத்திடம் ஒப்ப டைக்கப்பட்டுள்ளன. கடத்தப்படும் இத்தகைய விலங்குகளால் சிங்கப்பூரில் நோய்கள் தொற்றும் அபாயம் ஏற்படும் என்று குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் கூறியது.