தோ பாயோ ஹப்பில் நேற்று பிற்பகல் இரு ஆடவருக்கு இடையே சண்டை மூண்டதாக ஸ்டோம்ப் இணையப்பக்கச் செய்தி குறிப்பிடுகிறது. இந்தச் சம்பவம் பற்றி அமிருல் என்பவர் காணொளி ஒன்றையும் அனுப்பிவைத்துள்ளார். தெரிந்தவர் ஒருவருக்காக அந்தப் பகுதியில் காத்துக்கொண்டிருந்தபோது ஆடவர் இருவர் மாறிமாறி தாக்கிக்கொண்ட சத்தம் கேட்டதாக திரு அமிருல் கூறியுள்ளார். கைகலப்பில் ஈடுபட்ட இருவரில் சற்றுக் குள்ளமாக இருந்த ஒருவர் மற்றவரைத் தாக்க முற்பட்டது காணொளியில் காணப்படுகிறது. அவரை மற்றவர் முறைத்துப் பார்த்துவிட்டு அங்கிருந்து வெளியேறிச் செல்ல முயற்சிப்பதும் பதிவாகியுள்ளது. சற்று நேரத்தில் இருவரும் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். சண்டைக்கான காரணம் பற்றித் தெரியவில்லை என்று திரு அமிருல் குறிப்பிட்டுள்ளார்.
தோ பாயோ ஹப்பில் கைகலப்பு
1 mins read

