எஸ்.வெங்கடேஷ்வரன்
மாணவர்கள் கல்வியில் மேலும் சிறப்புகள் அடைய ஊக்குவிப்பு அளிக்கும் வகையில் நேற்று முன் தினம் 100 தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குக் கல்வி உதவி நிதி வழங்கியது தமிழர் பேரவை. உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வர்த்தக தொழில் மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் சிறப்பு விருந்தின ராகக் கலந்துகொண்டார். "மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு தமிழர் பேரவை பல்லாண்டுகளாக முதலீடு செய்து வருகிறது. சிங்கப்பூர் இப்போது வலுவான, முன்நோக் கிய சிந்தனை படைத்த சமூகமாக இருப்பதற்கு நம்மில் பலர் கல்விக் குக் கொடுத்த முக்கியத்துவம் ஒரு காரணம்," என்றார் திரு சீ. பல இன மக்கள் கொண்ட சிங்கப்பூர் சமுதாயத்தில் மற்றவர் களிடம் தொடர்புகொள்வதற்கு ஆங்கிலத்தைப் பயன்படுத்துவது அவசியமானாலும் தாய்மொழி யைத் தொடர்ந்து கற்றுக்கொள்ள அரசாங்கம் ஆதரவளிப்பதாகக் கூறிய திரு சீ, தமிழ்மொழியைத் தினசரி பயன்பாட்டில் வைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தினார். 'ஊக்க விருதுகள்' என்ற புதிய பிரிவும் இவ்வாண்டு அறி முகமானது. இப்பிரிவில் 10 மாண வர்களுக்கு கல்வி நிதி விருதுகள் வழங்கப்பட்டன. அனைத்து பாடங் களிலும் 75% மேல் மதிப்பெண் பெறும் மாணவர்கள் இவ்விரு துக்குத் தகுதி பெறுவர்.
"மற்ற பாடங்களுடன் தமிழ் மொழியிலும் சிறப்பாகத் தேர்ச்சி பெற்ற மாணவர்களை ஆங்கீகரிக் கும் வகையில் இந்த புதிய விருது கள் அமைகின்றன. இது போன்ற விருதுகள் தமிழ்மொழியின் முக் கியத்துவத்தை எடுத்துக்காட்கின் றன. ஒரு சமூகத்தின் கலாசாரத் திற்கும் அதன் பண்புநெறிகளுக் கும் மொழி ஒரு பாலமாக அமைகிறது," என்றார் திரு சீ. ஹுவாமின் தொடக்கப்பள்ளி யில் தொடக்கநிலை ஆறில் படிக் கும் டார்வின் கணேஷ்மூர்த்தியும் தொடக்கநிலை ஐந்தில் படிக்கும் செல்வி யாஷிவித்தா கணேஷ் மூர்த்தியும் நேற்று நிதி உதவி பெற்றனர். இவர்களுக்கு உயர் நிலைப் பள்ளியில் படிக்கும் இரு மூத்த சகோதரர்கள் உள்ளனர்.
அத்துடன், 34 வயதான அவர் களின் தாயார் திருமதி வனிதா வரதராஜூ ஏழு மாத கர்ப்பிணி. அவர் நிர்வாக உதவியாளராக இருக்கிறார். தந்தை திரு கணேஷ் மூர்த்தி, 36, ராஜேந்திரன் பாது காப்பு ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரிகிறார். ஆனால், திரு டார்வின் மூன்று வயது முதலே லூக்கிமியா என்ற கொடிய இரத்தப் புற்று நோயால் அவதியுற்றார். ஓராண்டுக்கு முன்புதான் அவர் முழுமையாகக் குணமடைந்தார். "டார்வினின் லூக்கிமியா நோய்க்கான சிகிச்சை 8 ஆண்டு காலம் நீடித்தது. அதற்கு சுமார் $80,000 செலவானது. பல அரசாங்க அமைப்புகளின் மூலம் கிடைத்த நிதிச் சலுகைகளால் தான் இந்த செலவைப் பார்த்துக் கொள்ள முடிந்தது," என்றார் திருமதி வனிதா.
"குடும்ப சூழ்நிலையைப் பற்றித் தெரிவித்தபோது மிகவும் இரக்கத் துடன் பள்ளிகள் நிதி ஆதரவு வழங்கின. தமிழர் பேரவை வழங் கும் கல்வி உதவி நிதியும் பிள் ளைகளுக்குப் படிப்பில் நிதிசார்ந்த தடைகளை முறியடிக்க உதவு கிறது," என்றார் திருமதி வனிதா. 2000ஆம் ஆண்டிலிருந்து கல்வி உதவி நிதி வழங்கி வரும் தமிழர் பேரவை இதுவரை 3,000க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு சுமார் $400,000 வழங்கியுள்ளது. இந்த நிதி நன்கொடையாளர்கள், ஆதரவாளர்கள் ஆகியோரிடமிருந்து திரட்டப்படுகிறது. நேற்றைய நிகழ்ச்சியில் தொடக்கப்பள்ளி மாணவர்கள் 100 பேருக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

