சிலேத்தார் விரைவுச்சாலையில் நேற்று இரண்டு கார்கள், ஒரு வேன் தொடர்பில் நிகழ்ந்த விபத்து காரணமாக மூவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். புக்கிட் தீமா விரைவுச் சாலையை நோக்கிய பாதையில் அதிகாலை 5.57 மணிக்கு நிகழ்ந்த இந்த விபத்து குறித்து போலிசாருக்கு தகவல் கிடைத் தது. ஹோண்டா காரின் 65 வயது ஓட்டுநர், பயணிகளான 36 வயது பெண், 42 வயது ஆடவர் ஆகியோர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவர்கள் சுயநினைவுடன் இருந்ததாக போலிசார் தெரிவித்தனர்.
ஹோண்டா கார் மீது ஜாகுவார் கார் ஒன்று மோதிய தைக் காட்டும் காணொளி ஃபேஸ்புக்கில் பகிரப்பட்து. ஜாகுவார் கார் அதிவேகத்தில் வலப்புறத் தடத்தில் சென்றதும் மத்தியில் உள்ள தடத்தில் சென்று கொண்டிருந்த ஹோண்டா கார் மீதும் இடக்கோடித் தடத்தில் சென்றுகொண்டிருந்த வேன் மீதும் ஜாகுவார் கார் மோதியதும் அதில் பதிவாகியுள்ளன. கார் மோதிய தாக்கத்தால் ஹோண்டா கார் விரைவுச்சாலை யின் பக்கவாட்டில் மோதியது. இந்த விபத்தைத் தொடர்ந்து இட, வலமாக சுமார் ஐந்து வினாடிக ளுக்கு வழுக்கிச் சென்ற ஜாகுவார், சாலையின் ஓரத்தில் நின்றது. இந்த விபத்து குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

