சமூகமும் குடும்பமும் துணைபுரிய வேண்டும்

சமூகமும் குடும்பமும் துணைபுரிய வேண்டும்

3 mins read
45169cef-b1d4-4add-9282-0506fb6249b5
-

இர்ஷாத் முஹம்மது

போதைப் புழங்கிகள் குற்றத்திற் கான தண்டனையை அனுப்பவித்த பின்னர் அவர்களை மீண்டும் சமுதாயத்தில் இணைத்துக் கொள்ள, குறைந்தது மூன்று வழிகள் உள்ளதாக சுற்றுப்புற, நீர்வளத் துறை அமைச்சரும் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரு மான திரு மசகோஸ் ஸுல்கிஃப்லி தெரிவித்துள்ளார். முன்னாள் போதைப் புழங்கி களுக்குத் தேவையான ஆதரவைத் தரும் அமைப்புகள் செயல்படுவதை அரசாங்கம் உறுதிசெய்வது அதில் ஒரு வழி. தண்டனையை எதிர் நோக்கிய அவர்களை மீண்டும் சமுதாயத்தில் இணைத்துக் கொள்ள சமூகம் தயாராக இருக்க வேண்டும் என்பதும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அவர்களை வரவேற்கத் தயாராக இருக்க வேண்டும் என்பதும் மற்ற இரண்டு வழிகள் என்று அமைச்சர் கூறினார்.

இதற்கு நிறைய கால அவகாசம் தேவைப்படும் என்று கூறிய அமைச்சர், கலாசார அடிப்படை யிலான சமூக ஆதரவு நிறைய பலன் தரக்கூடியதாக இருப்பதை சுட்டிக்காட்டினார். இந்திய சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் போதைப் புழங்கிகளை சமுதாயத்தின் ஓர் அங்கமாக ஏற்றுக்கொள்வதில் இந்திய சமூக அமைப்புகளின் பங்கு இன்றியமை யாதது என்றார் அவர். இந்து அறக்கட்டளை வாரியத் தின் போதைப் புழங்கிகளுக்கான மறுவாழ்வு இல்லமான 'ஆஷ்ரம்' இல்லத்தில் நேற்று நடைபெற்ற குடும்ப தினக் கொண்டாட்டங் களில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மசகோஸ் கலந்து கொண்டார்.

கடந்த 1999ஆம் ஆண்டு நிறுவப்பட்ட 'ஆஷ்ரம்' மறுவாழ்வு இல்லத்தின் இருபதாம் ஆண்டுக் கொண்டாட்டங்களின் தொடக்க மாக நேற்று குடும்ப தின விழா இடம்பெற்றது. இளையர்களை முன்நிறுத்திய விழாவாக அமைந்த நேற்றைய நிகழ்வில், நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்களும் சிண்டா, சிங்கப்பூர் போதைப் பொருள் தடுப்புச் சங்கம், மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு போன்ற அமைப்புகளும் பங்கு கொண்டன.

"அண்மைய கருத்துக்கணிப் பில், புதிய போதைப் புழங்கிகளில் பெரும்பான்மையினர் 30 வயதுக் கும் உட்பட்டவர்கள் என்பதை அறிந்தோம். இளையர்களுக்கு மத்தியில் ஏற்படும் இந்தத் தவறான பழக்கத்தை முறியடிக்க, இளையர்களே இந்த விழாவை வழிநடத்துகின்றனர்," என்றார் ஏற்பாட்டுக் குழுத் தலைவரான 61 வயது திரு மதியழகன் நல்லப்பன். "எந்த ஒரு பிரச்சினையையும் தைரியமாக எதிர்நோக்க குடும்பத் தின் ஆதரவு அவசியம் என்பதை வலியுறுத்தும் விழாவாக இது அமைந்தது," என்றும் அவர் சொன்னார். விழாவில் உரையாற்றிய 'ஆஷ்ரம்' இல்லத்தின் தலைவர் பேராசிரியர் கணபதி நாராயணன், கடந்த 20 ஆண்டுகளில் மறுவாழ் வுத் திட்டத்தின் மூலம் 900க்கும் மேற்பட்டவர்களை 'ஆஷ்ரம்' இல் லம் சமூகத்தில் ஒருங்கிணைத் துள்ளதாகக் கூறினார்.

மறுவாழ்விற்கு குடும்பங்களும் சமூகமும் முக்கிய பங்களிக்க முடியும் என்பதை திரு கணபதி வலியுறுத்தினார். மீண்டும் போதைக்கு அடிமை யாகாமல் இருப்பதற்கு 'ஆஷ்ரம்' போன்ற மறுவாழ்வு இல்லங்கள் இன்றியமையாத பங்கை ஆற்று வதாகக் கூறினார் சிங்கப்பூர் போதைப்பொருள் தடுப்புச் சங்கத் தின் நிர்வாக இயக்குநர் அப்துல் கரீம். திடீரென்று மீண்டும் சுதந்திரம் பெறும் முன்னாள் போதைப் புழங்கிகளை சீரான முறையில் சமூகத்தோடு இணைக்க தற்காலிகப் புகலிடமாக இவை அமைவதாக அவர் கூறி னார். குடும்ப தின விழாவில் பல்வேறு அமைப்புகள் வருகை யாளர்களுக்கு கேளிக்கை அனுபவத்தை வழங்கின.

இந்தப் பங்காளித்துவத்தின் மூலம் சமூகத்திற்குப் பங்காற்று வதில் பெருமை கொள்வதாகக் கூறினார் சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன். "தவறான பாதையில் சென்று மறுபடியும் நல்ல பாதைக்கு வரும் சமுதாயத்தின் எந்தத் தரப்பின ருக்கும் உறுதுணையாகவும் நம்பிக்கையாகவும் சமூகம் இருக்க வேண்டும்," என்றார் திரு அன்பரசு. அவர்களின் முதுகைத் தட்டி 'உங்களால் முடியும்' என்ற நம்பிக்கையை சமூகம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறி னார். 'ஆஷ்ரம்' இல்லத்தின் முன்னாள், இந்நாள் குடியிருப்பாளர் கள், அவர்களது குடும்பத்தினர், சமூகத் தலைவர்கள் உட்பட சுமார் 250 பேர் குடும்ப தின நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.