தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேச நிறுவனர்கள் நினைவிட ரயில் நிலையம் உருவாகும்

1 mins read
8ae2fb6a-33c1-4a84-9d3a-638cd5d422ad
-

தாம்சன்=ஈஸ்ட் கோஸ்ட் எம்ஆர்டி ரயில் வழித்தடத்தில் தஞ்சோங் ரூ, கார்டன்ஸ் பை தி பே நிலை யங்களுக்கு இடையில் கூடுதலாக ஒரு ரயில் நிலையம் அமைக்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. அந்தக் கூடுதல் நிலையத்திற்கு 'தேச நிறுவனர்கள் நினைவிட நிலையம்' என்று பெயர். அது ஐந்து ஹெக்டர் நிலப்பரப்பில் கட்டப்பட்டு வரும் நினைவிடத் திற்குப் பக்கத்தில் அமைந் திருக்கும். இரண்டுமே 2025ல் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்க ளுக்குச் சேவையாற்றத் தொடங் கும்.

அந்த இடத்தில் ஒரு புதிய எம்ஆர்டி நிலையத்தை அமைப் பதற்கான பொறியியல் பணிகள் முன்னதாகவே கணிக்கப்பட்டு இடம்பெற்றிருந்தன. ஆனால் அந்தப் புதிய நிலையம் பற்றி முன்பு அறிவிக்கப்படவில்லை.