சிங்கப்பூரின் புதிய தலைமைக் கணக்குத் தணிக்கையாளராக திருவாட்டி கோ சூன் போ நியமிக்கப்பட்டு இருக்கிறார். பிரதமர் அலுவலகம் நேற்று அறிக்கை ஒன்றில் இதனை தெரிவித்தது. திருவாட்டி கோ, பிப்ரவரி 8ஆம் தேதி முதல் அந்தப் பொறுப்பை வகிப்பார். தலைமைக் கணக்குத் தணிக்கையாளராக இப்போது பணியாற்றும் வில்லி டான் யோக் மெங் அப்பதவி யிலிருந்து ஓய்வு பெறுகிறார். இதனிடையே, 45 ஆண்டு காலம் பொதுச் சேவையிலும் ஆறாண்டு காலம் தலைமைக் கணக்குத் தணிக்கை அதி காரியாகவும் பணியாற்றியுள்ள திரு டான் யோக் மெங் கிற்கு, 63, அரசாங்கச் சேவைத்துறை தலைவர் லியோ யிப் நன்றி தெரிவித்தார்.
புதிய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் நியமனம்
1 mins read

