அனைத்துலக கும்பலின் கையாளுக்கு 54 மாதச் சிறை

அனைத்துலக கும்பலின் கையாளுக்கு 54 மாதச் சிறை

1 mins read

அனைத்துலக கும்பல் ஒன்றுக்காக வேலை செய்த நபர் ஒருவர் சிங்கப்பூருக்கு 2017ல், 14 தடவை வந்து மொத்தம் ஏறக்குறைய $760,000 சட்டவிரோத தொகையை வசூலித்து அவற்றை வேறு கணக்குகளுக்கு மாற்றியும்விட்டார். மலேசியரான டான் கிம் ஹுய், 24, என்ற அந்த ஆடவருக்கு நேற்று 4ரி ஆண்டு (54 மாதம்) சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர் 2017 ஏப்ரல் மாதத்திற்கும் ஜூலை மாதத்திற்கும் இடையில் சட்டவிரோத செயல்களைப் புரிந்தார். ஐந்து குற்றச்சாட்டுகளின் பேரில் டான் சென்ற ஆண்டு அக்டோபரில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதேபோன்ற இதர ஒன்பது குற்றச்சாட்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட போது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன. டான் சம்பந்தப்பட்டு இருந்த அனைத்துலக கும்பல் போலிஸ் போல நடித்துப் பலரையும் ஏமாற்றி இருக்கிறது.