2018ல் சிங்கப்பூர்- மலேசியா உறவுக்கு வந்த சோதனை

2018ல் சிங்கப்பூர்- மலேசியா உறவுக்கு வந்த சோதனை

1 mins read

சிங்கப்பூருக்குச் சென்ற ஆண்டு சவால்மிக்க ஆண்டாக இருந்தது என்றும் மலேசியாவுடன் கூடிய சிங்கப்பூரின் இரு தரப்பு உறவுக்குக் கடந்த ஆண்டில் சோதனை ஏற்பட்டது என்றும் தலைமைச் சட்ட அதிகாரி லூசியன் வோங் தெரிவித்தார். பக்கத்து நாடுகளில், குறிப்பாக மலேசியாவில் ஏற்படக்கூடிய அரசியல் நிலவரங்களிலிருந்து தன்னைத் தடுத்துக் காத்துக் கொள்ளும் ஆற்றல் சிறிய நாடு என்ற முறையில் சிங்கப் பூருக்கு எப்போதுமே இருந்து வரக்கூடிய வாய்ப்பு இல்லை என்று 2019 சட்ட ஆண்டு தொடக்க நிகழ்ச்சியில் ஆற்றிய உரையில் திரு வோங் குறிப்பிட்டார்.

மலேசியாவில் அரசாங்கம் மாறியதன் காரணமாக இரு நாடுகளுக்கும் தொடர்பான அதிவேக ரயில் திட்டம் போன்ற பல திட்டங்களில் கணிசமான அளவுக்கு பாதிப்புகள் ஏற்பட்டன என்று தலைமைச் சட்ட அதிகாரி கூறினார். பெட்ரா பிராங்கா விவகாரத்தில் செயல்பட்டதைப் போலவே தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் மலேசியா தொடர்பான இதர விவகாரங்களிலும் அரசுக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.