இளம் வழக்கறிஞர்கள் கடுமையாக பாடுபட்டு முன்னேற வேண்டும். அதேவேளையில், அளவுக்கு அதிக உழைப்புக் காரணமாக சோர்வு ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்பதையும் அவர்கள் உணர்ந்து கொண்டிருக்க வேண் டும் என்று சிங்கப்பூர் நீதித்துறை கல்லூரி துறைத் தலைவர் திரு ஃபூ சீ ஹோக் தெரிவித்தார். மூத்த வழக்கறிஞராக நிய மிக்கப்பட்டு இருக்கும் திரு ஃபூ, 58, அப்போதைக்கு அப்போது இளம் வழக்கறிஞர்கள், நிலவரங் களைக் கண்ணோட்டமிட்டு அத் தகைய வாழ்க்கைத்தொழில் தங் களுக்கு விருப்பமான ஒன்றுதானா என்பதை முடிவு செய்துகொள்ள வேண்டும் என்றார். வழக்கறிஞர் தொழிலில் வேலை பளு, நெருக்குதல்கள், பல வற்றையும் கற்றுக்கொள்ள வேண் டிய அவசியம் எல்லாம் உண்மை யானவைதான் என்றாரவர்.
இளம் வழக்கறிஞர்கள் வாழ்க் கையின் இதர அம்சங்களில் பாதிப்பு ஏற்படும் வகையில் ஏராள நேரத்தையும் சக்தியையும் தங்கள் வாழ்க்கைத் தொழிலில் முதலிடு களாக வைப்பர். திரு ஃபூவுடன் முன்னைய நீதித்துறை ஆணையாளரான, 65 வயது திருவாட்டி ஃபூ டுவாட் இயனும் கௌரவ மூத்த வழக்கறி ஞராக நியமிக்கப்பட்டுள்ளார்.

