மெல்பர்னுக்குப் பறந்த 'ஸ்கூட்' 48 நிமிடங்களில் திரும்பியது

மெல்பர்னுக்குப் பறந்த 'ஸ்கூட்' 48 நிமிடங்களில் திரும்பியது

1 mins read

சிங்கப்பூரில் இருந்து ஆஸ்தி­ரேலியாவின் மெல்பர்ன் நகருக்கு நேற்றுக் காலையில் புறப்பட்ட ஸ்கூட் விமானம், 48 நிமிடங்­களில் சிங்கப்பூருக்குத் திரும்பி வந்தது. தொழில்நுட்பக் கோளாறே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது. டிஆர்24 விமானம் நேற்றுக் காலை 11 மணிக்கு சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் இருந்து மெல்பர்னுக்குப் புறப் பட்டது. விமானத்தில் இருக்கும் வானிலை­யைக் கணிக்கும் கருவி­யில் கோளாறு இருப்பது விமானிக்குத் தெரியவந்ததை அடுத்து விமானம் சிங்கப்பூருக்­குத் திரும்பியது. அந்த விமானம் மீண்டும் இன்று காலை 7.30 மணிக்குப் புறப்படுகிறது.