பெண் போலிசுக்கு தண்டனை

பெண் போலிசுக்கு தண்டனை

1 mins read

மானபங்கத்திற்கு இலக்கான தாகக் கூறப்பட்ட ஒருவர் அளித்த வாக்குமூலத்தில் தில்லுமுல்லு செய்ததற்காக கலைவாணி காளி முத்து என்ற பெண் போலிஸ்கார ருக்கு ஐந்து மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மானபங்கத்திற்கு இலக்கான தாகக் கூறப்பட்ட ஒருவரை புலன் விசாரணைக்காக சந்திக்க முடியா மல் போனதை அடுத்து அந்த மூத்த போலிஸ் அதிகாரி, அந்த மாது கொடுத்திருந்த வாக்குமூலத் தைத் திருத்தி அதன்மூலம் புலன் விசாரணையை வேகப்படுத்தலாம் என்று முடிவு செய்தார். தன்னை மற்றவர் தொட்டதை தான் ஒரு பொருட்டாகக் கருத வில்லை என்றும் இதில் மேல் நடவடிக்கை எதுவும் தேவை இல்லை என்றும் பொருள்படும் வகையில், பாதிக்கப்பட்ட பெண் வாக்குமூலம் கொடுத்ததாக திருத் தப்பட்ட வாக்குமூலம் கூறியது. மானபங்கத்திற்கு ஆளான மாது பின்னர் விசாரிக்கப்பட்ட போது அப்படி ஒரு வாக்கு மூலத்தை அளிக்கவில்லை என்று அவர் தெரிவித்துவிட்டார். அதனை அடுத்து அந்த மூத்த போலிஸ் அதிகாரி செய்த காரியம் அம்பலமானது.