ஆண்டுதோறும் நடக்கும் 'ஐ லைட் மரினா பே' கலைவிழா முதல் தடவையாக போர்ட் கேனிங் பூங்காவில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ராஃபிள்ஸ் டெர்ரசுக்கு விரிவுபடுத்தப்படும். சர் ஸ்டாம்ஃபோர்ட் ராஃபிள்ஸ் சிங்கப்பூர் வந்து 200 ஆண்டு நிறைவடைவதையொட்டி அந்தக் கலைவிழா விரிவுபடுத்தப்படுகிறது. கேளிக்கை, ஈடுபாடு, சீரிய அனுபவம் ஆகியவற்றுக்கான ஐந்து கருப்பொருள் மையங்களுடன் ஜனவரி 28 முதல் பிப்ரவரி 24 வரை நடக்கும் இந்த ஆண்டின் விழா, சிங்கப்பூரின் 200வது ஆண்டு நிறைவைத் தொடங்கி வைக்கும். நகர மறுசீரமைப்பு ஆணையம் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்கிறது. ஐந்து கருப்பொருள் மையங்களிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தும் நடவடிக்கைகளும் இடம்பெறும்.
ஐந்து மையங்களில் 200வது ஆண்டு கலை விழா
1 mins read

