அங்கீகாரம் இன்றி செயல்பட்ட போலிஸ் அதிகாரிக்குச் சிறை

அங்கீகாரம் இன்றி செயல்பட்ட போலிஸ் அதிகாரிக்குச் சிறை

1 mins read

அங்கீகாரம் இல்லாமல் போலிஸ் துறையின் கணினியில் இருந்து தகவல்களை எடுத்ததற்காக யாப் ஹோவ் டாட் என்ற போலிஸ்காரருக்கு நான்கு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2017 ஏப்ரல் 16ஆம் தேதி அதிகாலை சுமார் 4 மணிக்கு மோட்டார்சைக்கிளுடன் தொடர்புடைய சாலை விபத்து ஒன்றை அடுத்து அந்தப் போலிஸ் அதிகாரி, விபத்தில் சிக்கிய மோட்டார்சைக்கிளின் புகார் அறிக்கையை அங்கீகாரம் இல்லாமல் போலிஸ்துறை கணினி ஒன்றிலிருந்து எடுத்து அதைப் படம் பிடித்தார். அதைச் செய்தபோது படங்களை அவர் அழித்துவிட்டார். பத்திரங்கள் சாட்சியமாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில், அங்கீகாரம் இல்லாமல் போலிஸ்துறை கணினியில் நுழைந்ததாகக் கூறும் குற்றச்சாட்டை அந்த அதிகாரி ஒப்புக்கொண்டார்.