மருத்துவமனை ஊழியர்கள் 18 பேர் மீது நடவடிக்கை

மருத்துவமனை ஊழியர்கள் 18 பேர் மீது நடவடிக்கை

1 mins read
a70e360b-a352-48f4-a60d-6512bf7c4a7e
-

டான் டோக் செங் மருத்துவமனை 18 ஊழியர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்து இருக்கிறது. எச்சரிக்கை, அபரா தம் உள்ளிட்ட பலவும் அந்த நட வடிக்கைகளில் அடங்கும். அந்த மருத்துவமனையின் பல் மருந்தகத்தில் இடம்பெற்ற பாது காப்புக் குறைபாடுகளுக்கு அந்த 18 பேருமே பொறுப்பு என்று தெரி விக்கப்பட்டது.

டான் டோக் செங் மருத்துவ மனையின் பல் மருந்தகத்தில் சென்ற ஆண்டு நவம்பர் 28ஆம் தேதிக்கும் டிசம்பர் 5ஆம் தேதிக் கும் இடையில், 100% தூய்மைப் படுத்தப்படாத கருவிகளைக் கொண்டு எட்டு நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்க லாம் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, அதற்குப் பொறுப்பான ஊழியர்களுக்கு எதி ராக இப்போது நடவடிக்கை எடுக் கப்பட்டு இருக்கிறது. நிலையான தர மற்றும் பாது காப்பு நிபந்தனைகளுக்கு உட்பட்டு நடக்க தவறிய மூத்த மேற்பார்வை யாளர்களும் நிர்வாக ஊழியர்களும் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத் தப்பட்டோரில் அடங்குவர் என்று தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமம் தன் அறிக்கையில் நேற்று தெரிவித்தது. அந்த ஊழியர்களுக்கு ஆலோ சனை வழங்கப்படும். மறுபயிற்சி, மறுபோதனை திட்டத்திலும் அவர் கள் கலந்துகொள்வார்கள்.

எட்டு பொட்டலச் சாதனங்கள் கடைசிக் கட்ட துப்புரவு நடவடிக்கை யில் இடம்பெறவில்லை என்பதை டிசம்பர் 7ஆம் தேதி அந்த மருந்தகம் உறுதிப்படுத்தியது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்