காணாமல் போன நாய் மரணம்

காணாமல் போன நாய் மரணம்

1 mins read
3c6dc2ca-277b-40ab-8865-8faff8f55726
-

நாய்களுக்குத் தற்காலிக பராமரிப்பு நிலையமாக இயங்கும் 'பிளேட்டினியம் டோக்ஸ் கிளப்'பிலிருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் நாய் ஒன்று மாண்டதாக வேளாண், உணவு கால்நடை மருத்துவ ஆணையம் (ஏவிஏ) தெரிவித்தது.

'பிரின்ஸ்' என்ற பெயரைக் கொண்ட இந்நாய், காணாமல் போனதாக இதன் உரிமையாளர் இலெய்ன் மாவ் டிசம்பர் 30ஆம் தேதி தெரிவித்தார். காணாமல் போன தனது நாயை எவரேனும் கண்டால் தனக்குத் தெரிவிக்கக் கேட்கும் பதிவு ஒன்றைத் திருவாட்டி மாவ் ஃபேஸ்புக் பதிவில் எழுதினார். நாயைக் கண்டுபிடிப்போருக்கு $2,000 வெகுமதி கொடுக்கப்படும் என்று அவர் அந்தப் பதிவில் எழுதினார்.

ஆயினும், செல்லப் பிராணிகள் சரியாக நடத்தப்படுவதில்லை என்ற புகார்களைப் பெற்றிருந்த ஏவிஏ, புக்கிட் பாஞ்சாங்கில் அமைந்திருக்கும் இந்நிலையத்தின் மீது கடந்தசோதனைகளை நடத்தியபோது 'பிரின்ஸ்' அங்கேயே இறந்ததாக நேற்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது. இந்நாயின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஏவிஏ தெரியவந்தது.

'பிளேட்டியினம் டோக்ஸ் கிளப்'பின் 30 வயது உரிமையாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார். போலிசாரின் விசாரணை தொடர்கிறது.