பரிசோதனை மூலம் மேம்பட்ட செவிப்புலன்

இர்ஷாத் முஹம்மது


மூப்படையும் மனிதர்களுக்கு உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் சற்று குன்றுவது இயல்பு. பொதுவாகவே வேகம் குறைந்து உடல் பலவீனமடைந்து தடுமாற்றம் ஏற்படுவதும் இயல்பாகும்.
அந்த வரிசையில் கண் பார்வை மோசமடைவது, செவிப்புலன் சரிவது, வாய் சுகாதாரம் கெடுவது போன்ற சுகாதார செயல்பாட்டுக் குறைபாடுகளுக்கும் மூப்படைதலுக்கும் தொடர்பு உள்ளது.
மூத்தோர்களின் உடல்நலனையும் வாழ்க்கைத் தரத்தையும் இத்தகைய மருத்துவ நிலைகள் பாதிக்கக்கூடும்.

அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் வெள்ளித் திரைத் திட்டம் எனும் தேசிய அளவிலான சமூக சுகாதார செயல்பாட்டுப் பரிசோதனைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மூத்தோரின் கண்பார்வை, செவிப்புலன், வாய் சுகாதாரத்தைப் பரிசோதனை செய்து ஆரம்பக் கட்டத்திலேயே செயல்பாட்டுச் சரிவை கண்டறிய இந்தத் திட்டம் வழிவகுக்கிறது. தேவை நேர்ந்தால் தக்க நேரத்தில் அதற்குத் தீர்வு காணவும் இந்தத் திட்டம் உதவும்.

மூக்குக் கண்ணாடி, செவிச் சாதனம், பொய்ப்பற்கள் போன்ற உதவி சாதனங்கள் தேவைப்படும் மூத்தோர் இந்தத் திட்டத்தின் வாயிலாக சமூகத்தில் உள்ள சம்பந்தப்பட்ட பராமரிப்பு சேவைகளுடன் இணைக்கப்படுவார்கள். அதன் மூலம் கட்டுப்படியான விலையில் சாதனங்களை அவர்கள் பெற்று சமூகத்திலேயே ஆரோக்கியமாக மூப்படையலாம்.

சுகாதார செயல்பாட்டுப் பரிசோதனையால் பலனடைந்த மூத்தோரில் ஒருவர் 70 வயது திரு எஸ் குருசாமி ராமன். கடந்த அக்டோபர் மாதம் முதிய தலைமுறை தூதுவர்களின்மூலம் அவருக்குச் சுகாதார செயல்பாட்டுப் பரிசோதனைப் பற்றி தெரியவந்தது. அங் மோ கியோ வட்டாரத்தில் வசிக்கும் அவர் 'லயன்ஸ் பிஃபிரன்டர்ஸ்' மூத்தோர் நடவடிக்கை மையத் திற்குச் சென்று தமது உடல் செயல்பாடுகளைப் பரிசோதித்தார்.

அதன்மூலம் அவருக்குச் செவிப்புலன் குறைபாடு இருப்பது உறுதிப் படுத்தப்பட்டது.
பிறகு, தொடர் பரிசோதனைகளுக்காக தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையின் நடமாடும் செவிப்புலன் மருந்தகத்திற்கு அவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ள திரு ராமன் இதற்கு முன்னர் பலதுறை மருந்தகத்தில் தமது கண்பார்வையும் கால்களையும் பரிசோதனை செய்துள்ளார்.

அதன்மூலம் அவருக்கு மங்கலான கண்பார்வை இருப்பது அறியப்பட்டது. டான் டோக் செங் மருத்துவமனையில் அவர் அதற்கு தொடர் பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அறுவை சிகிச்சையின்றி அவருக்குக் கண் பார்வைப் பிரச்சினை சரிசெய்யப் பட்டது.

வயது முதிர்ச்சியின் காரணமாக சுகாதார செயல்பாட்டுப் பரிசோதனையை செய்துகொள்வது மிக முக்கியம் என்று திரு ராமன் கருதுகிறார்.

சுகாதாரமாக வாழ்வதும் முன்கூட்டியே சுகாதாரச் செயல்பாட்டுக் குறைபாடுகளைக் கண்டறிவதும் அவசியம் என்று அவர் நம்புகிறார்.

மூப்படைதலுக்கும் சுகாதார செயல்பாட்டுக் குறைபாடுகளுக்கும் தொடர்பு இருப்பதால் மூத்தோர்கள் தங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள ஆவனச் செய்வது சிறப்பு.
சுகாதார செயல்பாட்டுப் பரிசோதனையை இலவசமாகச் செய்து கொண்ட திரு ராமன், அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார்.

60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சிங்கப்பூரர்கள் இந்த வெள்ளித் திரைத் திட்டத்தால் பலனடையலாம்.

முன்னோடித் தலைமுறைத் திட்டத்தின் அட்டை வைத்திருப்போருக்கு இந்தப் பரிசோதனைகள் இலவசம்.

'சாஸ்' அட்டை வைத்திருப்போருக்கு $2 மட்டுமே. மற்ற சிங்கப்பூரர்கள் $5 கட்டணம் செலுத்தவேண்டும்.

முக்கிய குறிப்புகள்

வயது தொடர்பான செயலாற்றல் சரிவை முன்கூட்டியே கண்டறிய சுகாதார செயல்பாட்டுப் பரிசோதனை நோக்கம் கொண்டுள்ளது. தொடக்கத்திலேயே அறிகுறிகள் கண்டறியப்படாவிட்டால் தினசரி வாழ்க்கையில் பெரும் பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

வெள்ளித் திரைத் திட்டத்தின் கீழ் உங்கள் வீடமைப்புப் பேட்டையில் நடத்தப்படும் சுகாதார செயல்பாட்டுப் பரிசோதனையில் ஈடுபடுங்கள்.

projectsilverscreen.sg எனும் இணையத் தளம் மூலமாகவோ 1800 650 6060 எனும் தொலைபேசி எண் மூலம் சிங்கப்பூர் சில்வர் லைனைப் பொதுவிடுமுறைகளைத் தவிர திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் சனிக்கிழமைகளில் காலை 8.30 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் தொலைபேசி மூலமாகவோ தொடர்புகொள்ளலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!