சன்னலில் விரிசலால் நடுவழியில் திரும்பிய ‘சில்க்ஏர்’ விமானம்

சிங்கப்பூரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ‘சில்க்ஏர்’ நிறுவனத்தைச் சேர்ந்த  விமானத்தின் கட்டுப்பாட்டு அறையின் சன்னலில் விரிசல் ஏற்பட்டதை அடுத்து அந்த விமானம் நடுவழியில் தாய்லந்தின் சியாங் மாய் விமான நிலையத்திற்குத் திரும்ப வேண்டியிருந்தது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் திரும்ப அங்கு அனுப்பப்பட்டதாக ‘சில்க்ஏர்’ சேவைகளை நிர்வகிக்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்தது. 
உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.35 மணிக்கு விமானம் சிங்கப்பூருக்குத் திரும்ப வேண்டியிருந்தது.

தொழில்நுட்பக் கோளாறுகளைச் சரிசெய்ய பொறியாளர்களுக்குக் கால அவகாசம் தேவைப்பட்டதால் மாற்று விமானம் ஒன்று சிங்கப்பூரிலிருந்து அனுப்பப்பட்டதாக பேச்சாளர் கூறினார்.