சாலை விபத்தில் 24 பேர் காயம்; லாரி ஓட்டுநர் கைது

ஜூரோங் ஐலண்ட் விரைவுச் சாலையில் நேற்றுக் காலை நிகழ்ந்த சாலை விபத்தில் 24 பேர் காயமுற்றனர். இரண்டு பேருந்துகளும் ஒரு லாரியும் இந்த விபத்தில் மோதிக்கொண் டன. 67 வயது லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாக போலிஸ் தெரிவித்தது. விபத்து நிகழ்ந்தி ருப்பதாக காலை 7.37 மணிக்கு அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப் பட்டது. 23 பேர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையிலும் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனை யிலும் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டதாகவும் அப்போது அவர் கள் சுயநினைவுடன் இருந்ததாக வும் தெரிவிக்கப்பட்டது. எஞ்சிய ஒருவருக்கு இலே சான காயங்கள் ஏற்பட்டதாகவும் மருத்துவமனைக்குச் செல்ல அவர் மறுத்துவிட்டதாகவும் அதி காரிகள் கூறினர். காயமடைந்தவர்களில் பெரும் பாலானோர் லாரியில் சென்றவர் கள் என்றும் விபத்தின்போது அந்த லாரியில் 20 பேர் இருந் ததாகவும் நம்பப்படுகிறது.