பெண்ணின் நூதன மோசடி

பெண்ணின் நூதன மோசடி

1 mins read

பாத்திரம் கழுவும் டான் ஹ்வீ ங்கோ, 69, என்பவர் ஒரு ஆடவரிட மிருந்து, திரு லீ குவான் இயூ எனும் நபருக்கு பணம் தேவை என்று கூறி $130,000 தொகையை ஏமாற்றி பறித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. டான் இந்தக் குற்றங்களை 1999, 2013 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் செய்ததாகக் கூறப்படு கிறது. இந்த வழக்கின் முதல் நாள் விசாரணை நேற்று நடை பெற்றபோது, டான் இந்த சதிச் செயலின் மூளையாகச் செயல்பட்ட தாக மூத்த விசாரணை அதிகாரி மனோஜ் கல்வானி கூறினார். இடைத்தரகராகச் செயல்பட்ட திருவாட்டி பூ சோக் ஹியங் எனும் மற்றொரு மாது, பெட்ரோல் நிலையத்தில் பணிபுரியும் 74 வயது டான் சோய் கியாங்கிட மிருந்து பணத்தைப் பெற்று டானிடம் கொடுத்ததாக அதிகாரி கல்வானி கூறினார்.