பழத்தில் ஊசி புகார்; ஃபேர்பிரைஸ் மறுப்பு

பழத்தில் ஊசி புகார்; ஃபேர்பிரைஸ் மறுப்பு

1 mins read
d4f0068f-eb15-46bf-b029-13ee124528c7
-

ஜூரோங் ஈஸ்ட் பகுதியில் இருக்கும் ஃபேர்பிரைஸ் கடை ஒன்றிலிருந்து வாங்கிய 'ஸ்னேக்' பழப் பொட்டலம் ஒன்றில் ஊசி இருந்ததாக (படம்: லியன்ஹ வான்பாவ்) வாடிக்கையாளர் ஒருவர் குறிப்பிட்டதை அடுத்து, அத்தகைய தகவல் எதையும் தங்களது வாடிக்கையாளர்களிடமிருந்து பெறவில்லை என்று ஃபேர்பிரைஸ் குறிப்பிட்டுள்ளது. சோ சோங்லெங் எனும் ஃபேஸ்புக் பயனாளர் கடந்த திங்கட்கிழமை புகைப்படம் ஒன்றைப் பதிவேற்றியிருந்தார். அதில் ஊசியைப் போன்ற கூரிய பொருள் ஒன்று உரிக்கப்பட்ட 'ஸ்னேக்' பழத்தில் இருப்பது காணப்பட்டது. பொருட்களின் பாதுகாப்பு, தரம் ஆகியவற்றைக் கடுமையாகக் கருதுவதாகக் குறிப்பிட்ட ஃபேர்பிரைஸ் நிறுவனத்தின் பேச்சாளர், இதுபோன்ற உறுதிசெய்யப்படாத தகவல்களைப் பரப்பவேண்டாம் என்று பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார். தகவலுக்கு, ஃபேர்பிரைஸ் நிறுவனத்தின் 6552 2722 எனும் நேரடி தொலைபேசி எண்ணை அல்லது general.feedback@ fairprice.com.sg எனும் மின்னஞ்சல் முகவரியை நாடலாம்.