6 மாதங்களுக்கு இலவச மின்னிலக்கத் தீர்வுகள்

6 மாதங்களுக்கு இலவச மின்னிலக்கத் தீர்வுகள்

1 mins read

சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு அரசாங்கத்தின் 'ஸ்டார்ட் டிஜிட்டல்' திட்டம் மின்னிலக்கத் தீர்வுகளைச் சலுகைக் கட்டணத் தில் பெற உதவுகிறது. கார்ல்டன் ஹோட்டலில் நேற்று திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார் தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன். இத்திட்டத்தின்கீழ் வர்த்தகங் கள் இரு அடிப்படை மின்னிலக்கத் தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளலாம். குறைந்தது 18 மாதங்களுக்கு நீடிக்கும் இத்திட்டத்தில் முதல் ஆறு மாதங்கள் இலவசம். கணக்கியல், மனிதவள நிர் வாகம், மின்னிலக்க விற்பனைச் சந்தை, மின்னிலக்கப் பரிவர்த் தனைகள், இணையப் பாதுகாப்பு ஆகிய ஐந்து துறைகளில் ஏதேனும் இரண்டைத் தேர்ந் தெடுத்து நிறுவனங்கள் இவ்வுதவி யைப் பெறலாம்.

"சிங்கப்பூரின் வர்த்தகச் சந் தையில் பெரும்பாலானவை சிறிய, நடுத்தர நிறுவனங்கள். அவற்றைப் பெருமளவில், அதிவிரைவாக மின்னிலக்கமயமாக்குவது நம் பொருளாதாரத்தை மாற்றியமைப் பதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்," என்றார் அமைச்சர். இப்புதிய திட்டத்தின்கீழ் மலி வான, எளிமையான, தரமான அடிப்படை மின்னிலக்கத் தீர்வு களை அளிப்பதன்வழி புதிய சிறிய, நடுத்தர நிறுவனங்களின் தேவைகளை இத்திட்டம் பூர்த்தி செய்வதாகவும் திரு ஈஸ்வரன் குறிப்பிட்டார்.