கடந்த மூன்று வாரங்களாக அதி கரித்து வரும் டெங்கிச் சம்பவங் களின் எண்ணிக்கை ஜனவரி 5ஆம் தேதியுடன் 207ஐ எட்டியது. 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தை அடுத்து இப்போது பதி வான எண்ணிக்கையே ஆக அதி கமானது என்று நேற்று தேசிய சுற்றுப்புற வாரியம் கூறியது. ஏடிஸ் கொசு வகை அதிகரித் தது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் வாரியம் சொன்னது. ஏடிஸ் கொசுக்களின் எண் ணிக்கை 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தைக் காட்டிலும் சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்தில் 40 விழுக்காடு அதிகரித்திருந் ததாக வாரியத்தின் கண் காணிப்புத் தரவுகள் தெரிவித்தன. இதைக் கண்டறியாமல் இருந் திருந்தால், அதிக ஏடிஸ் கொசுக் களின் எண்ணிக்கையால் இந்த ஆண்டு கூடுதல் டெங்கிச் சம் பவங்கள் ஏற்படக்கூடும் என்று கூறப்பட்டது. இதுவரை ஆக அதிகமான டெங்கி சம்பவங்கள் பிடோக் ரெசர்வோர் சாலையில் பதிவாகின. கடந்த இரு வாரங்களில் மட்டும் 24 டெங்கி சம்பவங்கள் இவ்வட்டாரத்தில் ஏற்பட்டன. ST PHOTO: SHABANA BEGUM
ஒரே வாரத்தில் பதிவான 207 டெங்கிச் சம்பவங்கள்
1 mins read
-

