வேலையிடத்தில் கை, விரல் விபத்துகள் குறைந்துள்ளன

வேலையிடங்களில் கை, விரல் தொடர்பான விபத்துகளின் எண் ணிக்கை குறைந்துள்ளது. அது எண்ணிக்கையில் குறைந்து காணப்பட்டாலும் அது இன்னும் மேம்படுத்தப்படலாம் என்று மனித வள, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது தெரி வித்துள்ளார். “மனிதவள அமைச்சு கடந்த ஆண்டு மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில், அபாயங்கள் தொடர்பான மேம்பட்ட மதிப்பீடுகள் செய்யப்பட்டிருந்தால் கை மற்றும் விரல் துண்டிப்பு விபத்துகளைத் தவிர்த்திருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.

“இயந்திரப் பாதுகாப்பு விசை, பழுதுபார்ப்பு, பராமரிப்பு ஆகியவற் றின்போது இயந்திரத்தைச் செய லிழக்கச் செய்யும் வழிகள் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டிருக்கலாம்,” என்றும் அமைச்சர் சொன்னார். “குறிப்பாக, வேலையின்போது விபத்திலிருந்து மயிரிழையில் தப் பிக்கும் சம்பவங்கள் பற்றி மேலதி காரிகளுக்கு உடனடியாகத் தெரி விப்பது மிகவும் முக்கியம். “இவ்வாறு செய்வதால், அந்தக் குறிப்பிட்ட இயந்திரத்தில் போதிய பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதை மேலதிகாரிகள் உறுதி செய்து கொள்ளலாம். இதனால், கை, விரல்கள் தொடர்பான விபத்து களைத் தவிர்க்கலாம்,” என்றும் திரு ஸாக்கி விவரித்தார்.

சிங்கப்பூர் ஏரோ இன்ஜின் சர்வீசஸ் நிறுவனத்துக்கு நேற்று வருகை அளித்த மனிதவள, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது (வலமிருந்து 2வது), பயிற்றுவிப்பாளர் திரு ஹு ஹோய் சிங்கின் உதவியுடன் பாதுகாப்பாகக் கருவிகளைப் பயன்படுத்தும் முறையைச் செய்து பார்க்கிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்