வீட்டுக்குள் அழையா விருந்தாளியால் பீதி

1 mins read
fc0df94e-8dce-4ab6-a052-7affec8636f4
-

யூனோஸ் வட்டாரத்திலுள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக 'மேசனெட்' (maisonette) வீட்டின் கழிவறைக்குள் மூன்று மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று புகுந்தது. இதனை முதலில் கண்ட தமது மனைவி அதிர்ச்சியில் அலறியதாக அந்த வீட்டில் குடியிருக்கும் திரு கோ, 60, 'தி நியூ பேப்பர்' நாளிதழிடம் தெரிவித்தார்.

உதவிக்காக தமது பிள்ளைகள் வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையத்தைத் (ஏவிஏ) தொலைபேசி வழியாக அழைத்ததாகத் திரு கோ கூறினார். அதே நேரத்தில் அவர், மரீன் பரேட் நகர மன்றத்தையும் அழைத்ததாகக் கூறினார். இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு மலைப்பாம்பு வீட்டிலிருந்து அகற்றப்பட்டது.