ஜூரோங் ஈஸ்ட் வட்டாரத்திலுள்ள உணவங்காடி நிலையத்தில் கண்ணாடிப் பலகை ஒன்று நொறுங்கியதைத் தொடர்ந்து ஆறு பேர் காயமடைந்தனர். 3ஏ இண்டர்னேஷனல் பிஸ்னஸ் பார்க் ரோட்டிலுள்ள 'ஐகோன்எட்ஐபிபி' (Icon @ IBP) என்ற கடைத்தொகுதியில் இந்தச் சம்பவம் நடந்தது.
கண்ணாடிப் பலகைக்கு அருகிலுள்ள இரண்டு மேசைகளில் அமர்ந்திருந்த அறுவர் காயமடைந்தனர். அந்தப் பலகைக்கு ஆக அருகில் அமர்ந்திருந்த ஆடவர் அதிகமாகக் காயமடைந்ததாகச் சம்பவத்தில் நேரில் கண்ட ஒருவர் கூறினார்.
உதவிக்கான அழைப்பு பிற்பகல் 12.25 மணிக்கு வந்ததாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. காயமடைந்தோரில் ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
காயமடைந்தோரில் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். நேற்று அவர் வீடு திரும்பினார். மற்ற ஐவர் சிறு காயங்களுடன் தப்பியதாகக் கூறப்படுகிறது.

