பிரதமர் லீ: மாற்றங்களைச் சமாளிக்க அரசாங்கம் உதவும்

பொருளியல் மறுசீரமைப்பு, மேம்பாடு ஆகியவற்றுக்கான நட வடிக்கைகள் இடம்பெற்று வரும் நிலையில் மாற்றங்களைச் சமாளிப்பதில் சிங்கப்பூரர்களுக்கு உதவும் திட்டங்களும் உள்ளதாக பிரதமர் லீ சியன் லூங் தெரி வித்துள்ளார்.

“தங்களது வாழ்க்கைத்தொழில் வளங்கள், வேலைப் பாதுகாப்பு, குடும்பங்கள் ஆகியன பற்றி பலரும் அக்கறைப்படலாம், சிலர் கவலையும் கொள்ளலாம் என்பதால் இந்தப் பயணம் அவ்வளவு எளிதன்று. குறிப்பாக, வயது கூடி யவர்கள் புதிய தொழில்நுட் பத்தைக் கண்டு அதிகம் கவலைப்படலாம். இருப்பினும் அவற்றைத் தீர்க்க நம்மிடம் வளங்களும் தீர்வுகளும் உள்ளன. எப்படிப்பட்ட கடினமான நேரத்திலும் ஒவ்வொருவருக்கும் நாம் உதவுவோம்.

“சிங்கப்பூரில் விரிவான நடை முறைகளை நடைமுறைப்படுத்த நாம் அதிகமான நேரத்தைச் செலவிட்டுள்ளோம். அதன்மூலம் சில அனுபவங்களையும் பெற்றுள்ளோம். எனவே சிங்கப்பூரர்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண் டும். சிங்கப்பூர் எதிர்நோக்கும் மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. இருப்பினும் அதிக செழிப்பைப் பெறுவதற்கும் சிறந்த வேலைகளைச் செய்து சிறப்பான ஊதியம் பெறுவதற்கும் ஏதுவான வழிகளில் நாம் அவற்றைச் செயல்படுத்துவோம்,” என்றார் பிரதமர்.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

புதிய மின்னியல் சாலைக் கட்டண முறை அடுத்த ஆண்டிலிருந்து தயாராகும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 Jun 2019

அடுத்த ஆண்டு முதல் புதிய மின்னியல் சாலைக் கட்டணம்; வாகனங்களுக்குள் உள்ள சாதனம் இலவசமாக மாற்றப்படும்

நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தில் பிரதமர் லீ சியன் லூங். படம்: எஸ்பிஎச்

17 Jun 2019

புதிய பாணி பெருநாள் கொண்டாட்டம்