சிங்கப்பூர் அல்லது வியட்னாமில் சந்திப்பு

உலக நாடுகளின் பெரும் எதிர் பார்ப்புகளுக்கு இடையே அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் முதல் முறையாக சிங்கப்பூரில் சந்தித்துப் பேசினர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற இந்தச் சந்திப்பு வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தது. இந்தச் சூழ்நிலையில் திரு டிரம்ப்பும் திரு கிம்மும் மீண்டும் சந்தித்துப் பேச திட்டமிட்டுள் ளனர். இந்த 2வது உச்சநிலைச் சந்திப்பு எங்கு நடைபெறும் என்று கேள்வி எழுந்துள்ள வேளையில் சிங்கப்பூர் அல்லது வியட்னாமில் டிரம்ப்-கிம் சந்திப்பு நடைபெறலாம் என அதிகாரபூர்வமான தகவல் கள் தெரிவிக்கின்றன.

இறுதி செய்யப்பட்ட நாடுகளில் சிங்கப்பூரும் வியட்னாமும் இடம் பெற்றுள்ளன என்று தென்கொரிய அமைச்சின் அதிகாரிகள் குறிப் பிட்டனர். “ஊடகங்கள் குறிப்பிட்டுள்ள ஹவாயி உட்பட சிங்கப்பூர், வியட்னாம் ஆகிய இடங்களில் உச்சநிலைச் சந்திப்பு நடத்துவது குறித்து ஆராயப்படுகிறது,” என்று பெயர் தெரிவிக்க விரும்பாத அந்த அதிகாரி சொன்னார். “ஆனால் ஹவாயியைப் பொறுத்தவரை சாத்தியம் குறைவு. அங்கு வடகொரியாவின் தூதரகம் இல்லை. “சந்திப்பு நடைபெறும் இடம் பற்றி அதிபர் டிரம்ப்பும் வட கொரியத் தலைவர் கிம்மும் முடிவு செய்வார்கள்,” என்றார் அவர். இந்நிலையில் 2வது உச்ச நிலைச் சந்திப்பு எப்போது எந்த இடத்தில் நடைபெறும் என்ற ஆர்வம் உலக நாடுகளிடையே அதிகரித்துள்ளது. குறிப்பாக தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் விரைவில் டிரம்ப்-கிம் சந்திப்பு நடக்க வேண்டும் என்று எதிர்பார்க் கிறார்.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

புதிய மின்னியல் சாலைக் கட்டண முறை அடுத்த ஆண்டிலிருந்து தயாராகும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 Jun 2019

அடுத்த ஆண்டு முதல் புதிய மின்னியல் சாலைக் கட்டணம்; வாகனங்களுக்குள் உள்ள சாதனம் இலவசமாக மாற்றப்படும்

நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தில் பிரதமர் லீ சியன் லூங். படம்: எஸ்பிஎச்

17 Jun 2019

புதிய பாணி பெருநாள் கொண்டாட்டம்