போலி கடவுச்சீட்டு: இருவருக்கு சிறைத் தண்டனை

சிங்கப்பூர் கடவுச்சீட்டு சட்டத்தின் கீழ் நேற்று இரு இலங்கை நாட்டவருக்கு தலா எட்டு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பரராசாசிங்கம் புவிந்தன், 30 போலி கனடிய பாஸ்போர்ட் வைத்திருந்ததாகவும் மாரிமுத்து சுப்ர மணியம், 48, போலியான பயண ஆவணங்களை பெற உதவியதாக வும் நேற்று வெளியிட்ட அறிக் கையில் சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் தெரிவித்தது. கடந்த ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி சாங்கி விமான நிலைய முனையம் 1ல் காத் திருக்கும் அறையில் பரராசா சிங்கம் கடவுச்சீட்டை கொடுத்தபோது அது போலியானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் அவர் வெளிநாட்டில் வேலை தேடியது தெரிய வந்தது. மூன்றாவது முகவர் ஒருவரி டமிருந்து அவர் போலியான கனடிய கடவுச்சீட்டைப் பெற்றிருந்தார். அதில் அவரது புகைப் படம் ஒட்டப்பட்டிருந்தாலும் சொந்த விவரங்கள் வேறுபட்டி ருந்தன. முகவரின் ஏற்பாட்டில் இருவரும் இலங்கை கடவுச்சீட்டு மூலம் அக்டோபர் 28ஆம் தேதி சிங்கப்பூர் வந்துசேர்ந்தனர். பின்னர் பரராசாசிங்கத்தை மாரிமுத்து காத்திருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றார்.