மாணவர் மரணம்; டாக்சி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

மாணவர் மரணம்; டாக்சி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

1 mins read
3fef380d-44d7-4b0a-8d18-eea0f57ece26
-

என்யுஎஸ் மாணவர் ஒருவர் சாலை விபத்தில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் டாக்சி ஓட்டுநர் மீது நேற்று குற்றம்சாட்டப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி மாலை 7.30 மணி அளவில் 19 வயது என்யுஎஸ் மாணவரான கேத்தி ஓங் காய் டிங்கும் அவரது மூன்று நண்பர்களும் திரு யாப் கோக் ஹுவாவின் 55, டாக்சியில் பயணம் செய்தனர். அப்போது அவர்கள் பயணம் செய்த டாக்சி விபத்தில் சிக்கியது. இதில் மாணவர் கேத்தி மரணமடைந்தார். இதன் காரணமாக கவனக் குறைவாக டாக்சியை ஓட்டியதாக ஓட்டுநர் யாப் கோக் ஹுவா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.