துவாசில் உள்ள மலேசிய கப்பலுக்கு ஜோகூர் முதலமைச்சர் வருகை

துவாசில் உள்ள மலேசிய கப்பலுக்கு ஜோகூர் முதலமைச்சர் வருகை

1 mins read
5bd15fb9-4d36-4476-95cd-240abff53d90
-

சிங்கப்பூர்- மலேசிய வெளியுறவு அமைச்சர்கள் கடந்த செவ்வாய்க் கிழமை சிங்கப்பூரில் கூட்டம் நடத்திய அடுத்த நாள் தாம் துவா சில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மலேசிய அரசாங்கத்தின் கப்ப லுக்கு வருகை மேற்கொண்டது பற்றி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்தார் ஜோகூர் மாநில முதலமைச்சர் ஒஸ்மான் சப்பியான். அக்கப்பலில் இருந்த மலேசிய கடல்துறை அதிகாரிகளை முதல மைச்சரும் ஜோகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரான திரு டான் ஹோங் பின்னும் சந்தித் தனர்.

"இரு நாடுகளுக்கு இடையி லான கடல் எல்லைகள் குறித்து கேப்டன் முகம்மது அஸ்லான் விளக்கமளித்தார். "மலேசிய கடல்துறை அதிகாரி கள், பாதுகாப்பு அமைப்புகளின் அதிகாரிகள் ஆகியோரின் சேவைக்கும் தியாகத்துக்கும் நன்றி கூறுகிறேன்," என்று திரு ஒஸ்மான் தமது பதிவில் எழுதியிருந்தார். இது குறித்து கருத்துரைத்த சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் (எம்பிஏ), சிங்கப்பூர் கடற்பகுதியில் ஐந்து மலேசியக் கப்பல்கள் புதன்கிழமை மாலை 6 மணி வரை நிறுத்திவைக்கப்பட்டி ருந்தன என்று குறிப்பிட்டது. வியாழக்கிழமை மாலை 6 மணி வரை அங்கு இரண்டு மலே சிய கப்பல்கள் இருந்ததையும் எம்பிஏ உறுதி செய்தது.