கைதிகளுக்கு ஒரே அதிகாரி

கைதிகளுக்கு ஒரே அதிகாரி

1 mins read
adf26081-7e87-4ca6-b386-b69d231d9861
-

சிறையில் உள்ள கைதிகளுக்கு ஆலோசனை கூறி வழிகாட்டுவ தற்கு முடிந்தவரை ஒரே அதிகாரி நியமிக்கப்படுவார். அதாவது, சிறையில் தண்டனை காலத்தைத் தொடங்கியதிலிருந்து கைதி சிறையிலிருந்து விடுதலை யானவுடனும் அதே அதிகாரி அந்தக் கைதியின் நடவடிக்கை களைக் கண்காணித்து அவர் மீண்டும் சமூகத்துடன் முழுமை யாக ஒன்றிணையும் வரை அவ ருக்கு ஆலோசனை வழங்குவார். இந்த புதிய முயற்சிகளை சிங்கப்பூர் சிறைத்துறை அறிமுகப் படுத்தி, நடத்தி வருகின்றது. சிறைத்துறை இதுபோன்ற நட வடிக்கைகளை நடைமுறைப் படுத் துவதை தனது சமூகம் சார்ந்த திட்ட உத்திகளில் ஒன்றாக வகுத் துள்ளது என்று தெரிவித்தார் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம். அப்பர் சாங்கி ரோடு நார்த்தில் அமைந்துள்ள அரசாங்கம் நடத் தும் செலாராங் போதையர் மறு வாழ்வு இல்லத்தை நேற்று சுற்றிப் பார்ப்பதற்கு முன் திரு சண்முகம் உரையாற்றினார்.