விபரீதமாக எண்ண வைத்த காட்சி

தமது அடுக்குமாடி வீட்டிலிருந்து கீழே வந்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மாடியிலிருந்து குதித்து விழுந்தது போன்று தரையில் படுத்திருந்த மாது ஒருவரைப் பார்த்து 'பாய் சாம்' என்ற ஃபேஸ்புக் பயனீட்டாளர் ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்து போனார். அந்தப் பெண்மணி ரத்தக் கரையுடன் கீழே விழுந்திருந்தது போன்று இருந்தது அந்தக் காட்சி.

 ஆனால் சற்று உற்று பார்த்தபோதுதான் புரிந்தது அந்தப் பெண், அருகில், வெயிலில் ஏதோ உணவுப் பொருட்களை உலர வைத்திருந்தது தெரிய வந்தது. அதற்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று எண்ணித்தான் அவர் அருகிலேயே படுத்திருந்திருக்க வேண்டும். சிவப்பு சேலை அணிந்திருந்த அவர், சில செய்தித்தாட்களைக் கிழே விரித்தி அதில் படுத்திருந்ததை அடுக்குமாடி வீட்டின் மேல் மாடியிலிருந்து எடுத்த மற்றொரு படத்தில் தெளிவாகக் காட்டியது. அசதியால் அந்தப் பெண்மணி கண் அயர்ந்திருக்கவேண்டும்.

ஆனால் இது ஏதும் தெரியாதவர் திடீரென்று அந்தப் பெண்மணியைக் குறிப்பிட்ட இடத்திலிருந்து பார்த்ததால் ஒரு கணம் தவறாக எண்ணிவிட்டார். அந்தப் படங்களை 'பாய் சாம்' என்பவர் தமது ஃபேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார். இந்தச்  சம்பவத்தைக் கண்டு பலரும் இணையத்தில் கருத்து தெரிவித்திருந்தனர்.