‘நிலப் போக்குவரத்து பெருந்திட்டம் 2040’ பரிந்துரைகள் அடுத்த மாதம்

நிலப் போக்குவரத்துப் பெருந்திட்டம் 2040ன் தொடர்பில் அதன் ஆலோ சனைக் குழுவில் இடம்பெற்றுள்ள பல உறுப்பினர்கள் நேற்று ஒன்று கூடி விவாதித்தனர். வேலைக்கு 45 நிமிடப் பயணம் குடியிருப்பு நகரங் களின் வசதிகளை அடைய 20 நிமி டங்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு உத்தேசக் குறிக்கோள்கள் இந்த கவனக் குழு விவாதத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்டன. பெருந்திட்டம் தொடர்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் நிலப் போக்குவரத்து ஆணையம் பொதுமக்களிடம் கருத்துத் திரட்டும் நடவடிக்கையைத் தொடங்கியது. மூன்று அம்சங்களில் கருத்துகள் திரட்டப்பட்டன. பொதுப் போக்குவரத்தை பயணத் துக்கு முன்னுரிமை தரும் அம்சமாகப் பயன்படுத்த பயணிகளை எவ்வாறு ஊக்குவிக்கலாம்; எல்லாத் தரப்பு பயணிகளின் எண்ணிக்கையை எவ் வாறு உயர்த்துவது; பொதுப் போக்கு வரத்து மூலம் வாழ்க்கைத்தரத்தை எவ்வாறு மேம்படுத்துவது ஆகியன அந்த அம்சங்கள்.