இணையப் பொய்யை எதிர்த்து போரிட புதிய நடவடிக்கை

வேண்டுமென்றே இணையத்தில் பொய்யைப் பரப்பும் செயல்களை முறியடிக்கும் நோக்கில் புதிய நடவடிக்கை நேற்று தொடங்கப் பட்டுள்ளது. சமயத் தலைவர்களுக்கும் சமய அமைப்புகளுக்கும் பயங் கரவாத எதிர்ப்பு கருத்தரங்கு களை நடத்தும் முக்கிய நோக்கம் கொண்டது இந்நடவடிக்கை. தேசிய நூலக வாரியத்தால் நடத்தப்படும் 30 நிமிட உரை சமயத் தலைவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமையும். தகவல் பகுத்தறிதல் மற்றும் தகவல் அறிதல் ஆகியனவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நோக்கில் கடந்த 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட S.U.R.E எனப்படும் பிரசாரத்தின் ஒரு பகுதி இந்தப் புதிய நட வடிக்கை. பௌத்த, தாவோயிச ஆலயங் களுக்கான கருத்தரங்கில் பங் கேற்ற கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ இந்தப் புதிய உரை நடவடிக் கையைத் தொடங்கிவைத்தார்.