புதிய திறன் கட்டமைப்பு துவக்கம்

வரும் ஆண்டுகளில் மூப்படையும் மக்கள்தொகையை சிங்கப்பூர் எதிர்நோக்குவதால் அதிகமான சமூக சேவை நிபுணர்கள் தேவைப்படுகின்றனர். சமூக சேவைத் துறையில் அதிகரித்து வரும் சவால்களைக் கையாளும் திறன்களும் அறிவாற்றலும் அவர்களுக்குத் தேவைப்படும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சேம் டான் தெரிவித்தார். அதனை நோக்கமாகக் கொண்டு புதிதாக சமூக சேவை திறன் கட்டமைப்பு ஒன்று நேற்று தொடங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 15,000 நிபுணர் கள் தங்களது வாழ்க்கைத்தொழிலையும் முன்னேற்றப் பாதை யையும் திட்டமிட புதிய கட்ட மைப்பு உதவும். சமூகப் பணி, இளையர் பணி, உளவியல் உள் ளிட்ட வேலைகளுக்குத் தேவைப் படும் திறன்கள், ஆற்றல் தொடர் பான தகவல்களை இது வழங்கும்.