எஸ்பிஎச்சின் வருவாயை உயர்த்திய புதிய சொத்து

சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸின் (எஸ்பிஎச்) சொத்து மூலமான வருவாய் 11.1 விழுக்காடு உயர்ந்து $68 மில்லி யனைத் தொட்டுள்ளது. வரிக்கு முந்திய லாபம் 5.2 விழுக் காடாக பதிவாகி உள்ள நிலையில், அதன் தொடக்க $3.2 மில்லியன் நடைமுறை வருவாய் அண்மையில் கையகப் படுத்தப்பட்ட மாணவர் தங்கும் விடுதிச் சொத்துகளின் மூலம் கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொத்துத் துறை மூலமான வருவாய் நல்ல முன்னேற்றம் கண்டுள்ள தாக எஸ்பிஎச் தலைமை நிர்வாக அதிகாரி இங் யாட் சுங் தெரிவித்தார்.