தைப்பூசம்: காவடி எடுக்கும் பக்தர்களுக்கு விதிமுறைகள்

ப. பாலசுப்பிரமணியம்

சிங்கப்பூரில் இந்த ஆண்டு தைப் பூசக் காவடி ஊர்வலம் வரும் 21ஆம் தேதி நடக்கிறது. தைப்பூச ஊர்வலம் தொடர்பிலான புதிய மாற்றங்கள் பற்றி நேற்று அறிவிக் கப்பட்டன. காவடி எடுப்போருக்கு உரிய விதிமுறைகளை விளக்கும் சிறப்பு நிகழ்ச்சி நேற்று ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலின் பிஜிபி மண்டபத்தில் நடந்தது. ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலின் நிர்வாகக் குழு செய லாளர் திரு சிவகுமரன் சாத்தப் பன், இந்து அறக்கட்டளை வாரிய தலைமை நிர்வாக அதிகாரி திரு த. ராஜசேகர் மற்றும் போலிஸ் பிரிவின் விளக்கங்களைத் தொடர்ந்து கேள்வி, பதில் அங்கம் நடந்தது. கடந்த சில ஆண்டுகளில் தைப்பூச ஊர்வலத்தில் ‘ஜால்ரா’ (ஜிங்=சாக்), ‘கர்த்தால்’ ஆகிய இசைக்கருவிகள் வாசிக்க அனுமதிக்கப்பட்டது. இம்முறை ‘கஞ்சிரா’ இசைக்கருவியையும் பஜனைக் குழுக்கள் வாசிக்கலாம். அதோடு, தவில் (Thavil), டோல் (Dhol) அல்லது கோல் (Khol) போன்ற இசைக்கருவியை வாசிக்க இம்முறை அனுமதி வழங் கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு இந்து அறக்கட்டளை வாரியத் திடம் முன்பதிவு செய்யவேண்டும்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்