ஆயர் ராஜா விரைவுச்சாலையில் சனிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றை அடுத்து 31 வயது மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அந்த விரைவுச்சாலையில் சனிக்கிழமை பிற்பகல் 4.53 மணிக்கு ஒரு மோட்டார் சைக்கிளும் வேனும் விபத்துக்கு உள்ளாகிவிட்டதாக போலிசுக்குத் தகவல் கிடைத்தது. அந்த விபத்தைக் காட்டும் காணொளி சமூக ஊடகத்தில் பதிவேற்றப்பட்டது. வெளிநாட்டில் பதியப்பட்ட அந்த மோட்டார் சைக்கிள், இழுவை வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முயன்ற போது விபத்து நிகழ்ந்துவிட் டதாகத் தெரிகிறது. மோட்டார் சைக்கிளோட்டி சுயநினை வுடன் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். போலிஸ் விசாரணை நடக்கிறது.
மோட்டார் சைக்கிளோட்டி காயம்
1 mins read

