சிங்கப்பூர், கலாசாரங்களை இணைப்பதற்கான உலகளாவிய மையமாகத் திகழ முடியும் என்று நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் தெரிவித்து இருக்கிறார். உலகமய யுகத்தில் இரண்டு நாடுகள் ஒரே மொழியைப் பேச முடிந்தால் அது அந்த இரண்டு நாடுகளுக்குமே பெரிய அனுகூலம் என்று அவர் குறிப்பிட்டார். பல மொழி திறன் பெற்ற சிங்கப்பூர், உலகம் முழுவதும் உள்ள மக்களையும் கலாசாரங்களையும் இணைக்கும் பால மாகத் திகழ சிறந்த ஒரு நிலையில் இருக்கிறது என்றார் அவர். சீன குலவழிச் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்களிடையே சனிக்கிழமை அமைச்சர் உரையாற்றினார்.
'உலக கலாசார இணைப்பு மையமாக சிங்கப்பூர் திகழ முடியும்'
1 mins read

